லக்னோ அணிக்காக இளம் வீரரை தட்டித்தூக்க தீவிரம் காட்டும் கம்பீர்.. கசிந்த தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இளம் வேகப்பந்து வீச்சாளரை லக்னோ அணியில் இணைக்க கௌதம் கம்பீர் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்க உள்ளது. ஏற்கனவே இருந்த 8 அணிகளுடன் புதிதாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரு அணிகள் இணைந்துள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. இதில் வெளிநாட்டு வீரர்கள் பலர் அதிக விலைக்கு எடுக்கப்பட்டனர்

இந்த நிலையில் சில அணிகளில் இடம் பெற்றிருந்த வீரர்கள் காயம் காரணமாக விலகி வருகின்றனர். அதனால் ஒவ்வொரு அணியும் தற்போது மாற்று வீரர்களை தேர்வு செய்து வருகின்றன. அந்த வகையில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட்டை ஏலத்தில் எடுத்திருந்துள்ளது.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் மார்க் வுட் காயம் காரணமாக அந்த டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதனை அடுத்து ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். இதன் காரணமாக தற்போது அவருக்கான மாற்று வீரரை தேர்வு செய்வதில் லக்னோ அணி மிக தீவிரமாக இருக்கிறது.

அந்த வகையில், லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் தற்போது மார்க் வுட்டுக்கான சரியான மாற்று வீரரை தேர்வு செய்யும் வேலையில் இறங்கி உள்ளார். அதில் வங்க தேச அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான டஸ்கின் அகமதுவை லக்னோ அணியில் இணைக்க தீவிரம் காட்டி வருகிறார். இதுகுறித்து கூறிய அவர், ‘நான் டஸ்கின் அகமதுவை லக்னோ அணியில் இணைக்க விரும்புகிறேன். அவர் இந்த தொடர் முழுவதும் எங்கள் அணிக்காக விளையாடினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஒருவேளை நாங்கள் வழங்கும் இந்த வாய்ப்பை அவர் ஏற்றுக்கொண்டால், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் முடிந்து டெஸ்ட் தொடரை தவிர்த்து விட்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்’ என கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

GAUTAMGAMBHIR, IPL, TASKINAHMED, LUCKNOWSUPERGIANTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்