‘டிஎன்பிஎஸ்சி தேர்வில்’... ‘தோனி குறித்த கேள்வி’... 'சமூக வலைத்தளத்தில் வைரல்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் மகேந்திர சிங் தோனி குறித்த கேள்விக்கு பதிலளித்த பலர், அந்த பதில் சரிதானா என்று இணையத்தில் தேடியதால் ட்ரெண்ட் ஆனது.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடந்து முடிந்தது. சுமார் 15 லட்சம் பேர் எழுதிய இந்தத் தேர்வில் தோனி குறித்த சுவாரஸ்யமான கேள்வி கேட்கப்பட்டது. கேள்விக்கான பதில் சரிதானா என்று பலரும் இணையத்தில் தேடியதால், அந்த கேள்வி இணையத்தில் டிரெண்ட்டாகி வருகிறது. அந்த கேள்வி இதுதான்.

தோனி 30 போட்டிகளில் 72 ரன்கள் சராசரி வைத்துள்ளார். 31-வது போட்டிக்குப் பின் அவர் சராசரி 73 ஆக உயர்ந்தது. அப்படி என்றால் அவர் 31-வது போட்டியில் எத்தனை ரன்கள் சேர்த்தார் என்பது தான் அந்தக் கேள்வி. இதற்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி, 100, 103, 74, 108 என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டு இருந்தன. கேள்விக்கான பதில், தோனி 30 போட்டிகளில் 72 ரன்கள் சராசரி வைத்துள்ளார். அதாவது அவர் 30 x 72 = 2160 ரன்கள் அடித்து இருந்தார்.

31-வது போட்டிக்கு பின் அவர் சராசரி 73 என்றால், அவர் 31 x 73 = 2263 ரன்கள் அடித்துள்ளார்.  இந்த கணக்குப்படி தோனி அடித்த ரன்கள் 103 (2263 - 2160). இது எளிய வகை கணக்கு தான் என்றாலும், இதற்கு உதாரணமாக கிரிக்கெட்டை எடுத்து கொண்டதால், கிரிக்கெட் தெரியாதவர்கள் பலர் இந்த கேள்விக்கு தாங்கள் எழுதிய பதில் சரிதான என இணையத்தில் தேடி உள்ளனர். இதேபோல் மற்றொரு சுவாரசியமான கிரிக்கெட் கேள்வி கேட்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

MSDHONI, TNPSC

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்