VIDEO: ‘இதவிட பெரிய தருணத்தை இந்திய வரலாற்றிலேயே பார்க்க முடியாது..!’ உணர்ச்சி வசப்பட்டு துள்ளிக் குதித்த ‘தமிழ்’ கமெண்டேட்டர்.. வெறித்தனமான வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் தற்போது நடைபெற்று வரும் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இந்த தொடரின் ஆரம்பத்தில் இந்திய அணி சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. நெதர்லாந்துக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது. இதனை அடுத்து நடந்த ஜெர்மனிக்கு எதிரான போட்டியிலும் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து கிரேட் பிரிட்டன் அணிக்கு எதிராக 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா மோசமாக தோல்வி அடைந்தது.

இப்படி மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்ததால், இந்திய அணி கால்இறுதிக்கு கூட நுழையாது என பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனை அடுத்து நடைபெற்ற நான்காவது போட்டியில் அயர்லாந்தையும், ஐந்தாவது போட்டியில் தென் ஆப்பிரிக்காவையும் இந்திய மகளிர் அணி வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய மகளிர் ஹாக்கி அணி கால்இறுதிக்கு தகுதி பெற்று திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்த நிலையில், இன்று (02.08.2021) கால்இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொண்டது. இப்போட்டியின் முதல் பாதியிலேயே இந்திய அணி ஒரு கோல் போட்டது. இதன்காரணமாக இரண்டாம் பாதி ஆட்டம் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் கடைசி வரை ஆஸ்திரேலிய அணியால் கோல் ஏதும் போட முடியவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம் விமர்சனங்களை தவிடுபொடியாக்கி, முதல்முறையாக ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்று இந்திய மகளிர் ஹாக்கி அணி வரலாற்று சாதனை படைத்தது.

இதனால் இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் ஹாக்கி போட்டியை வர்ணனை செய்துகொண்டிருந்த தமிழ் வர்ணனையாளர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். அப்போது வர்ணனையாளர் ஒருவர் உணர்ச்சி மிகுதியில் பேசிய வீடியோவை Sony Sports தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்