"இதுக்கு பேர் தான் கர்மா"..பாகிஸ்தான் தோல்விக்கு அக்தர் போட்ட எமோஜி.. இந்திய பவுலர் 'நச்' Reply!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் போட்ட ட்வீட்டுக்கு இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஷமி அளித்த பதில் ட்வீட் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

ஆஸ்திரேலியாவில்  நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை தொடரின்  இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி  அடைந்துள்ளது. குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியுசிலாந்து அணியை  பாகிஸ்தான் அணி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்த்து ஆடியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி, நியுசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில்  டாஸ் வென்று பேட்டிங் செய்த நியுசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் வெற்றி இலக்கை 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து எட்டியது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி நியுசிலாந்து அணியை வென்றது. பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் எதிர்த்து விளையாடியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் விக்கெட்டுகள் எதையும் இழக்காமல், 16 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற உதவினர்.

இந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, இன்று ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர் கொண்டனர்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பீல்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் மசூத்- 38 (28) ரன்கள் எடுத்தார்.பாபர் - 32 (28) ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சாம் கரண் 3 விக்கெட்டுகள் எடுத்தார். ரஷித் & ஜோர்டான் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.

இரண்டாவது பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. துவக்க வீரர் ஹேல்ஸ் 1 ரனனில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் பட்லர் 26 (17) ரன்கள் குவித்தார். இறுதியில் பென் ஸ்டோக்ஸ் 51 ரன்கள் குவித்தார். மொயின் அலி 20 ரன்கள் குவித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலககோப்பையை வென்றது.

பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவிய நிலையில் அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர், தனது டிவிட்டர் பக்கத்தில் "💔" என பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த இந்திய வீரர் ஷமி, மன்னிக்க சகோதரரே.. இதற்கு பெயர் தான் கர்மா" என பதில் ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

MOHAMMADSHAMI, SHOIAB AKHTER, SHOAIB AKHTAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்