T20 WC : "இந்தியா மேட்ச்'ச Live'ஆ தியேட்டர்'ல பாக்கலாம்".. பிரபல Multiplex செய்த அதிரடி ஒப்பந்தம்.. குஷியில் ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி வருவதால் அனைத்து அணிகளும் தற்போதில் இருந்தே தீவிரமாக தயாராகி வருகின்றன.

Advertising
>
Advertising

ஆஸ்திரேலியாவில் வைத்து இந்த முறை டி 20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்தது.

அதே போல, பயிற்சி ஆட்டங்களிலும் தற்போது மோதி வருகின்றனர். சூப்பர் 12 சுற்றில்
'குரூப் 2'வில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தங்களின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்திக்க உள்ளது.

கடந்த ஆண்டு நடந்த டி 20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் லீக் சுற்றில் தோல்வி அடைந்திருந்த இந்திய அணி, அடுத்தடுத்த தோல்விகளால் லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது. இந்த முறை முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வதால், நிச்சயம் பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், உலக கோப்பை தொடரை முன்னிட்டு இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனமான ஐநாக்ஸ் (INOX) செய்துள்ள ஒப்பந்தம், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

டி 20 உலக கோப்பையில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் திரை அரங்குகளில் நேரடியாக திரையிடுவதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ICC) ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ். இதுகுறித்த அறிக்கை ஒன்றும் ஐநாக்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பாகிஸ்தானுடன் மோதும் முதல் போட்டியில் இருந்தே கிரிக்கெட் போட்டியை திரை அரங்கில் திரையிட ஐநாக்ஸ் முடிவு செய்துள்ள நிலையில், 25 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள தங்களின் தியேட்டர்களில் நேரடியாக போட்டிகளை காணலாம் என்றும் ஐநாக்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரை அரங்குகளில் கிரிக்கெட் போட்டிகளை திரையிடுவதன் மூலம், நமது நாட்டில் அதிகம் விரும்பப்படும் கிரிக்கெட் போட்டியை த்ரில் கலந்த மாபெரும் திரை அனுபவம் மற்றும் அதிக ஒலியுடன் கண்டு கழிக்க முடியும் என்றும் ஐநாக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

டிவி அல்லது மொபைல் போன் மூலம் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் கண்டுகளித்து வரும் நிலையில், நிச்சயம் திரை அரங்கில் போட்டிகள் பார்ப்பது ஒரு அசத்தலான அனுபவத்தை கொடுக்கும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

INOX, ICC, T20 WORLD CUP, IND VS PAK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்