இறுதிப்போட்டியில் நுழைந்த இங்கிலாந்து.. இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல சேனல்.. குஷியில் ரசிகர்கள்..! T20WorldCup22

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து அணியுடனான போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலமாக T20 இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது இங்கிலாந்து. இந்நிலையில் இறுதிப்போட்டியை இலவசமாக ஒளிபரப்ப இருப்பதாக அறிவித்திருக்கிறது பிரபல சேனல் ஒன்று.

Advertising
>
Advertising

Also Read | INDIA VS ENGLAND: கண்கலங்கியபடி வெளியேறிய விராட் கோலி.. ரசிகர்களின் நெஞ்சை நொறுக்கிய வீடியோ..!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சூப்பர் 12 சுற்றின் முடிவுகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தது. முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனிடையே இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது இந்தியா.

அடிலெய்டில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் நிதானமாக ஆடிய விராட் கோலி அரைசதம் எடுத்து அவுட் ஆனார். மற்றொரு பக்கம் நிதானமாக ஆட்டத்தை துவங்கிய ஹர்திக் பாண்டியா இறுதியில் அபாரமாக ஆடி 63 ரன்களை குவித்தார்.

இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் அணியை வெற்றிபெற செய்தனர். 16 ஓவர்களில் இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. ஜோஸ் பட்லர் 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்களும் எடுத்து அசத்தி இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலமாக நவம்பர் 13 ஆம் தேதியன்று நடக்க உள்ள டி 20 உலக கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது இங்கிலாந்து. ஏற்கனவே, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் தலா ஒரு முறை டி 20 உலக கோப்பையை கைப்பற்றி உள்ளதால் இந்த முறை வெல்லும் அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியை UK-வில் இலவசமாக ஒளிபரப்ப இருக்கிறது சேனல் 4 நிறுவனம். நடப்பு T20 உலகக்கோப்பை தொடரை UK -வில் ஒளிபரப்பும் உரிமையை ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. இந்நிலையில், இறுதிப்போட்டியை இலவசமாக சேனல் 4 ஒளிபரப்ப அந்நிறுவனம் அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர். முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியையும் சேனல் 4 நிறுவனம் இலவசமாக ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.

Also Read | "கார்டு மேலே இருக்க நெம்பர் சொல்லுங்கோ சார்".. ஆபீஸர்னு நெனச்சு OTP சொன்ன நபர்.. அடுத்த செகண்ட் வந்த அதிர்ச்சி மெசேஜ்.!

CRICKET, T20 WC, T20 WC ENGLAND VS PAKISTAN, ENGLAND VS PAKISTAN MATCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்