'ஆடும் லெவனில் சான்ஸ் கொடுக்கல’... ‘ட்ரெண்டாகும் தமிழக வீரர் நடராஜன்’... ‘விராட் கோலியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது போட்டியிலும், இந்திய அணி திணறி வரும் நிலையில் தமிழக வீரர் நடராஜன் உள்பட பல வீரர்களை ரசிகர்கள், ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி போன்றே ஆஸ்திரேலிய அணி இந்திய பவுலர்களின் பந்துகளை விரட்டி அடித்து, 389 ரன்களை குவித்தனர். அதிலும், ஆஸ்திரேலியாவின் முதல் 5 பேட்ஸ்மேன்களும் அரைச்சதத்தை கடந்து சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில், முதல் போட்டியில் சொதப்பிய நவ்தீப் சைனிக்கு பதிலாக, தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் மன்னன் நடராஜனுக்கு இன்றைய ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு வாய்ப்பு அளிக்காமல் முதல் போட்டியில் களமிறங்கிய அணியே மீண்டும் களமிறங்கி, இமாலய ரன்களை ஆஸ்திரேலிய அணி குவிக்க சாதகமாக அமைந்தது.

இதனால் கடுப்பான கிரிக்கெட் ரசிகர்கள், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் கேப்டன்சியை வறுத்தெடுத்து வருகின்றனர். காலை முதலே, தோனி மற்றும் ரோகித் சர்மா போன்ற மூத்த வீரர்களின் அறிவுரை இல்லாததால், கோலி மிகவும் தடுமாறுவதாக குற்றஞ்சாட்டி வந்தனர். 

பின்னர், அதிக ரன்களை விட்டுக்கொடுக்கும் சாஹல், பும்ரா மற்றும் நவ்தீப் சைனிக்கு எதிராகவும் ரசிகர்கள், கோலியை ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், தற்போது ஒருநாள் அணிக்குழுவில் இருக்கும் நடராஜன், ஆடும் லெவனில் 11 பேர் கொண்ட அணியில் எடுக்கப்படவில்லை. இவரை 11 பேர் கொண்ட அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இதனால் நடராஜன் பெயர் ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 

இப்படி ட்ரெண்ட் செய்து சொன்னால்தான் கோலிக்கு புரியும். சைனியை விட நடராஜன் நல்ல பவுலர். நன்றாக ஸ்விங் செய்வார், யார்க்கர் போடுவார். அவரை எடுக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் கோலிக்கு வலுவான கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். அப்போதாவது அடுத்த போட்டியில் நடராஜனை விராட் கோலி சேர்க்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்