‘இரண்டு தமிழக வீரர்களையும் சேர்த்து’... ‘3 பேரும் ஆஸ்திரேலியாவிலேயே இருங்க’... ‘பிசிசிஐ போட்ட உத்தரவு’... 'வெளியான தகவல்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய அணியைச் சேர்ந்த நடராஜன் உள்ளிட்ட 3 இந்திய வீரர்களை டெஸ்ட் தொடர் முடியும் வரை ஆஸ்திரேலியாவிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஆடிய நடராஜன் பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். இதன்மூலம் இந்திய அணியில் முதலில் நெட் பவுலராக மட்டுமே நடராஜன் தேர்வானார். வருண் சக்ரவர்த்தி மற்றும் நவ்தீப் சைனி காயம் காரணமாக நடராஜனுக்கு இந்திய அணிக்குள் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் ஒருநாள், டி 20 போட்டிகளில் பவுலராக அறிமுகம் ஆனார்.

தான் அறிமுகம் ஆன ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் இரண்டிலும் நடராஜன் மிகவும் சிறப்பாக ஆடினார். இதன் மூலம் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க இவருக்கு வாய்ப்புகள் வந்துள்ளது. இந்த நிலையில் ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடியும் வரை ஆஸ்திரேலியாவிலேயே நடராஜன் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட சில வீரர்கள் டெஸ்ட் தொடருக்கு முன்னதாகவே கிளம்பிவிட்ட நிலையில், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் ஆகிய மூன்று இந்திய வீரர்களை டெஸ்ட் தொடர் முடியும் வரை ஆஸ்திரேலியாவிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இவர்கள் 3 பேருமே டி20 தொடரில் சாதித்து காட்டினர்.

ஜடேஜா டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா, மாட்டாரா என்று இதுவரை தெரியவில்லை. அதேபோல், இஷாந்த் சர்மா டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நவ்தீப் சைனி முதுகுவலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு மாற்றாக இவர்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே இவர்களை ஆஸ்திரேலியாவில் இருக்கும்படி கூறியுள்ளனர்.

அதன்படி இனி வரும் நாட்களில் இவர்கள் நெட் பயிற்சியின் போது பவுலிங் செய்ய உள்ளனர். இந்திய வீரர்களுக்கு நெட் பயிற்சியின் போது இவர்கள்தான் பவுலிங் செய்வார்கள். இந்திய பவுலர்கள் யாராவது காயம் அடைந்தால், இவர்கள் மாற்று வீரர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்