‘நீங்கதான் பிரதர்’... ‘நடராஜனுக்கு கோப்பையை கொடுத்த கையோடு’... ‘ஹர்திக் பாண்ட்யா சொன்ன வார்த்தை’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் சிறப்பாக ஆடிய தமிழக வீரர் நடராஜனை மூத்த வீரர் ஹர்திக் பாண்ட்யா புகழ்ந்து பாராட்டி உள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்திய அணியில் அறிமுகம் ஆகியுள்ள தமிழக வீரர் நடராஜன் இந்த தொடர் முழுக்க சிறப்பாக பவுலிங் செய்தார். அறிமுக ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் எடுத்து அசத்தினார். அதன்பின் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட், 2-வது நடந்த டி 20 போட்டியில் 2 விக்கெட் என்று பெரிய அளவில் நடராஜன் கவனம் ஈர்த்து இருக்கிறார்.
இன்று நடந்த போட்டியிலும் இக்கட்டான சூழ்நிலையில் வெறும் 33 ரன்களை மட்டுமே கொடுத்தார். அதோடு இவர் ஒரு விக்கெட் எடுத்தார். மேத்யூ வேட் விக்கெட்டிற்கு கோலி டிஆர்எஸ் கேட்டு இருந்தால் நடராஜன் இன்னொரு விக்கெட்டும் எடுத்து இருப்பார்.
இந்த தொடரில் சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்ட்யாவிற்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் இந்த விருதை ஹர்திக் பாண்ட்யா தமிழக வீரர் நடராஜனிடம் கொடுத்தார். அவர்தான் விருதுக்கு தகுதியானவர், அவருக்குதான் விருது கிடைக்க வேண்டும் என்று கூறி நடராஜனுக்கு பாண்ட்யா கோப்பையை கொடுத்தார்.
பின்னர் இது தொடர்பாக டிவிட் செய்துள்ள பாண்ட்யா, ‘என்னை பொறுத்தவரையில் நடராஜன் பிரதர்.. நீங்கள் இந்த தொடரில் சிறப்பாக ஆடினீர்கள். அறிமுக தொடரிலேயே இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக நீங்கள் ஆடியதன் மூலம் உங்கள் திறமை மற்றும் கடின உழைப்பு நிரூபணம் ஆகிறது. இந்த தொடர் நாயகன் விருதுக்கு நீங்கள்தான் தகுதியானவர். இந்த தொடரை வென்ற இந்திய அணிக்கு எங்கள் வாழ்த்துக்கள்’ என்று ஹர்திக் பாண்ட்யா குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியில் நடராஜனை தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா ஊக்குவித்து பேசி வருகிறார். களத்திலும், களத்திற்கு வெளியிலும் இவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் நடராஜனின் திறமையை பாராட்டி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். நன்றாக ஆடுங்கள் என்று அறிவுரை வழங்கி வருகிறார். நடராஜன்தான் ஆட்டநாயகன் ஆக வேண்டும். அவரின் எளிமை எனக்கு பிடித்து இருக்கிறது என்று ஹர்திக் பாண்ட்யா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஆக்ரோஷமில்ல... என்ன நடந்தாலும் 'சிரிச்சிட்டே' இருக்கீங்க எப்படிங்க இது??..." தமிழிலேயே 'பதில்' சொல்லி... ரகசியம் உடைத்த 'நடராஜன்'!!!
- 'இவரயா முதல்ல நெட் பவுலரா எடுத்தீங்க'?.. 'debut சீரியஸ்-லயே இப்படி தெறிக்கவிட்றுகாரு'!.. மிரண்டு போன ஜாம்பவான்கள்!.. நடராஜனின் மேஜிக் என்ன?
- 'ஜஸ்ட் மிஸ்ஸானாலும்’... ‘நடராஜனுக்கு இது பொருத்தமானது’... ‘மகிழ்வித்து மகிழ்ந்த இரு வீரர்கள்’... ‘ அமேசிங் என்று கொண்டாடும் ரசிகர்கள்’...!!!
- 'சர்வதேச' அரங்கில் கிடைத்த முதல் 'சான்ஸ்'... மாஸான 'சாதனை' ஒண்ணு செஞ்சு... 'தூள்' கிளப்பிய யார்க்கர் 'நடராஜன்'... குவியும் 'பாராட்டு'க்கள்!!!
- "நடராஜனுக்கு சாப்பாடு கொடுக்கவே முடியாத நிலைமை"!.. "அவருக்கு கிரிக்கெட் நல்லா வரும் தெரிஞ்சுகிட்டது 'இப்படி' தான்"!.. கிரிக்கெட் வீரர் நட்டுவின் பெற்றோர் emotional பேட்டி!
- 'அப்டியே தோனி விளையாடறத’... ‘பார்க்கிற மாதிரி இருக்கு’... ‘என்ன ஒரு அதிரடி ஆட்டம்’... ‘இந்திய வீரருக்கு புகழாராம் சூட்டிய ஆஸ்திரேலிய கோச்’...!!!
- ‘அந்த ரெண்டு பிளேயர்கள் இல்லாமலேயே ஜெயிச்சுட்டோம்’... ‘ரொம்ப பெருமையா இருக்கு’... ‘போட்டிக்கு பின்பு கேப்டன் கோலி கருத்து’...!!!
- ‘தரமான சம்பவம்’... ‘யாக்கர் கிங் நடராஜனை புகழ்ந்து தள்ளிய’... ‘சர்ச்சைக்கு பெயர்போன வர்ணனையாளர்’...!!!
- 'டி20 போட்டியில் முத்திரை பதித்த 2 தமிழர்கள்’... ‘தெறிக்கவிட்ட இந்திய அணியின் மாற்று வீரர்’... ‘போராடி தோற்றுப்போன ஆஸ்திரேலியா அணி’...!!!
- ‘நடராஜன் இதைப் பண்ணினால்’... ‘கேப்டன் கங்குலிக்கு அவர் எப்படியோ’... ‘அதுமாதிரி கோலிக்கு இவர் இருப்பார்’... ‘பாராட்டி, அறிவுரை வழங்கிய முன்னாள் பவுலர்’...!!!