'நட்டு... யார்க்கர் நட்டு'!.. 'கேள்விபட்டிருக்கியா?'.. அந்த 2 ஓவர்ல... எல்லாரையும் செஞ்சுவிட்டாரு... இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த சொத்து நடராஜன்!.. ஏன்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆன தமிழக வீரர் நடராஜன் இன்று மிகவும் சிறப்பாக பவுலிங் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 14 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 302 ரன்கள் எடுத்தது. 49.2 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டையும் இழந்து 289 ரன்கள் எடுத்தது.   இந்த போட்டியில் இன்று தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அணியில் இருந்து சைனி நீக்கப்பட்ட நிலையில் இன்று நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

முதல் போட்டி என்ற போதிலும் ஐபிஎல் அனுபவம் காரணமாக மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார் நடராஜன். எந்த டென்ஷனும் இல்லாமல் இவர் பவுலிங் செய்தார். அதிலும் முக்கியமாக இவர் 6வது ஓவரிலேயே மார்னஸ் விக்கெட்டை எடுத்தார்.

கடந்த சில சர்வதேச போட்டிகளில் 50 ரன்னுக்கும் குறையாமல் எடுத்த மார்னஸ் இன்று நடராஜன் பவுலிங்கில் வெறும் 7 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின் ஓவர் போட்ட போதும் கூட நடராஜன் சிறப்பாக ரன் செல்வதை கட்டுப்படுத்தினார். 

கோலி சொல்வதை கேட்டு அதற்கு ஏற்றபடி பவுலிங் செய்தார். முக்கியமாக இவர் வீசிய 44 ஓவரில் 6 4 1 4 1 Wd 1 என்று மொத்தம் 18 ரன்கள் சென்றது. இதனால் எங்கே ஆட்டம் கையைவிட்டு சென்று விடுமோ என்று இந்திய அணி பதற தொடங்கியது. ஆனால் அதற்கு அடுத்த 46 ஓவரிலேயே இவர் ஆட்டத்தை கைக்குள் கொண்டு வந்தார். அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 

பின் மீண்டும் 48வது ஓவரை வீசிய நடராஜன் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டும் எடுத்தார். அகர் விக்கெட் விழுந்த நிலையில் ஆட்டமே மாறியது. இவர் போட்ட கடைசி இரண்டு ஓவரில் 1,0,0,0,1,2,W, 1,1,0,1,1 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஒரு பவுண்டரி கூட கொடுக்காமல் 1 விக்கெட் எடுத்தார். 

மொத்தமாக இந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை நடராஜன் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணியில் வருங்கால போட்டிகளில் இவர் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்திய அணியில் ஜாகிர் கானுக்கு பின் நடராஜன் மிக சிறந்த இடதுகை பவுலராக உருவெடுப்பதற்கான சூழ்நிலை தற்போது உருவாகி உள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்