"அடேங்கப்பா".. வெப் சீரிஸாக உருவாகும் 2007 டி 20 World Cup??.. வெளியான தகவலால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2007 ஆம் ஆண்டு முதலாவதாக நடந்த டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை எந்த இந்திய கிரிக்கெட் ரசிகராலும் எளிதில் மறந்து விட முடியாது.
Also Read | "சாரா கூட டேட்டிங்கா?".. முதல் முறையா கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் சொன்ன பதில்.. வைரல் பின்னணி!!
அதே ஆண்டில் நடைபெற்றிருந்த 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கி இருந்தது. சச்சின், கங்குலி, சேவாக் உள்ளிட்ட பல வீரர்கள் இருந்த போதும், பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான தோல்வியால் லீக் சுற்றுடன் இந்திய அணி வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, அதே ஆண்டில் முதலாவது டி 20 உலக கோப்பையும் நடைபெற்றிருந்தது. சீனியர் வீரர்கள் பலரும் இதில் இடம்பெறவில்லை என்ற நிலையில், தோனி தலைமையில் அப்போதைய இளம் வீரர்கள் இந்திய அணியில் களமிறங்கி இருந்தனர். யுவராஜ் சிங், கவுதம் கம்பீர், ரோஹித் ஷர்மா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருந்தனர். இந்த தொடரின் இறுதி போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் த்ரில் வெற்ற பெற்றிருந்தது இந்திய அணி.
முன்னதாக ஐம்பது ஓவர் உலக கோப்பை தொடரில் மோசமாக இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும், தோனி தலைமையிலான இளம் இந்திய அணி டி 20 உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது அந்த சமயத்தில் பெரிய அளவில் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருந்தது. இன்று வரை, 2007 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பை வென்ற தருணத்தை நினைத்து பார்த்தால், பல ரசிகர்களுக்கும் ஒருவித சிலிர்ப்பு உருவாக தான் செய்யும்.
இந்த நிலையில், தற்போது 2007 டி 20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது தொடர்பாக வெப் சீரிஸ் ஒன்று உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாக்குமெண்டரி வகையில் இந்த வெப் சீரிஸ் உருவாக உள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், 15 இந்திய கிரிக்கெட் வீரர்கள் இதில் இடம்பெறுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு, இந்த டாக்குமெண்டரி வெப் சீரியஸ் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், மூன்றில் இரண்டு பங்கு படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
UK-வை சேர்ந்த One One Six Network என்ற தயாரிப்பு நிறுவனம் இதை தயாரிக்கும் நிலையில், ஆனந்த் குமார் இதனை இயக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்திய கிரிக்கெட் அணியின் சொல்லப்படாத பயணத்தை இந்த ஆவணப்படத்தில் எடுத்துரைக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், சவுரப் பாண்டே இதற்கு எழுத்தாளராகவும் செயல்பட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
2007 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பை ஆவண படமாக உருவாகி வரும் தகவல், கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது .
Also Read | கன்னியாகுமரியில் ராமானுஜர் சிலை.. காணொலி மூலம் திறந்து வைக்கும் பிரதமர் மோடி.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்