"செம பிளேயர் அவரு.. 'அரசியல்' பண்ணியே டீம்'ல இருந்து காலி பண்ணிட்டீங்க.." 'இந்திய' அணி பற்றிய புகாரால் பரபரப்பு
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியில், தற்போது அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விக்கெட் கீப்பராக தொடர்ந்து செயல்பட்டு வருபவர் இளம் வீரர் ரிஷப் பண்ட்.
ஒரு சமயத்தில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக தோனி செயல்பட்டு வந்ததால், மற்ற விக்கெட் கீப்பர்கள் யாருக்கும் பெரிய அளவிலான வாய்ப்புகள், இந்திய அணியில் கிடைக்கவில்லை.
தொடர்ந்து, தோனியும் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு முடிவை அறிவிக்க, இளம் வீரர் ரிஷப் பண்ட்டிற்கு, அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.
வெயிட்டிங்கில் சீனியர் வீரர்
அதிரடியுடன் ஆடும் இளம் வீரர் பண்ட், தொடர்ந்து அனைத்து தொடர்களிலும் இடம் பிடித்து வரும் நிலையில், இந்திய அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் சஹாவிற்கு, இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதே அரிதாகி விட்டது. இரண்டாவது விக்கெட் கீப்பராகவே சஹா இந்திய டெஸ்ட் அணியில் இருக்கும் நிலையில், இலங்கை அணிக்கு எதிராக, டெஸ்ட் தொடர் ஒன்றில் இந்திய அணி மோதவுள்ளதால், அந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சஹா உள்ளார். இதற்காக, அவர் ரஞ்சி தொடரிலும் கலந்து கொள்ளாமல் விலகியுள்ளார்.
பரபரப்பு தகவல்
இது ஒரு புறம் இருக்க, இனி வரும் போட்டிகளில், சஹா உள்ளிட்ட சீனியர் வீரர்களை அதிகம் பயன்படுத்தாமல் இந்திய அணி ஒதுக்க போவதாகவும் ஒரு தகவல்கள் பரவி, பரபரப்பை உண்டு பண்ணியது. அதே போல, சஹாவும் ஓய்வினை அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால், இதனை அவர் மறுத்திருந்தார்.
சஹாவிற்கு ஆதரவு
சிறந்த கீப்பர் என்று பெயர் எடுத்த போதும், அணியில் இடம் கிடைக்காததால், பலரும் விக்கெட் கீப்பர் சஹா குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி, சஹாவுக்கு ஆதரவாக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
சிறப்பான விக்கெட் கீப்பர்
'விரித்திமான் சஹா தான் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ரிஷப் பண்ட்டின் அதிரடி பேட்டிங்கால் அவர் தொடர்ந்து, இந்திய அணியில் இடம் பிடித்து வருகிறார். 37 வயதிலும், சஹா தான் சிறந்த கீப்பர். அவர் மனம் தளர்ந்து போகக் கூடாது. இந்திய அணிக்காக, கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
அரசியலால் புறக்கணிப்பு
சஹா எந்த ஒரு குறிப்பிட்ட குரூப்பை சேர்ந்தவர் இல்லை என்பதால், அணியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் அரசியலால், நீங்கள் கை விடப்பட்டீர்கள். நான் எப்போதும் உங்களை சிறந்த விக்கெட் கீப்பராக நினைவில் கொள்வேன்' என சையது கிர்மானி தெரிவித்துள்ளார்.
எந்த குழுவையும் சார்ந்தவர் சஹா இல்லை என்பதாலும், இந்திய அணியின் அரசியல் காரணமாகவும் தான், சஹா இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டதாக, முன்னாள் வீரர் தெரிவித்துள்ள கருத்து, கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- யோவ் என்னய்யா இதெல்லாம்.. ‘செம’ வைரலாகும் ரிஷப் பந்த் போட்டோ..!
- IND vs WI : களம் ஒன்றில் ரிஷப் பாண்ட்.. ரோகித் ஷர்மா போட்ட மாஸ்டர் பிளான்! 'இது லிஸ்ட்லயே இல்லையே'!
- VIDEO: கேட்கவா, வேண்டாமா..? குழம்பி நின்ற ரோகித்.. வேகமாக ஓடி வந்த கோலி.. முதல் மேட்சே ‘வேறலெவல்’ சம்பவம்..!
- அய்யோ..! ரிஷப் பந்துக்கு மட்டும் கேப்டன்ஷி கொடுத்துறாதீங்க.. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.. வித்தியாசமான கருத்தை சொன்ன முன்னாள் வீரர்..!
- VIDEO: ரிஷப் பந்த் அதிரடியை பார்த்துட்டு கோலி செஞ்ச செயல்.. தலைவன் எப்பவுமே தனி ரகம் தான்யா..!
- "என்ன காமெடி பண்ணிட்டு இருக்கியா??.." கோபத்தில் Pant-ஐ திட்டிய Rahul.. எதுக்கு இப்டி மொறச்சு பாக்குறாரு??
- லிஸ்ட்ல இடம்பிடித்த 3 இந்திய வீரர்கள்.. ஆனா ‘கோலி’ பெயர் மிஸ்ஸிங்.. ரசிகர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த ஐசிசி..!
- ரோஹித் சரிபட்டு வரமாட்டாரு.. டெஸ்ட் கேப்டன் பதவியை அந்த பையனுக்கு கொடுக்கலாம்.. புது ட்விஸ்ட் வச்ச கவாஸ்கர்..!
- ரோஹித்தா?.. ராகுலா?.. கோலியின் இடம் யாருக்கு?.. இந்த 'லிஸ்ட்'ல சர்ப்ரைஸாக இருக்கும் இளம் வீரர்
- அது ரொம்ப ரிஸ்க்.. கே.எல்.ராகுலுக்கு விக்கெட் கீப்பிங் கொடுக்க கூடாது.. கம்பீர் கொடுத்த விளக்கம்..!