‘கழுத்துக்கு மேல கத்தி தொங்குது.. ரொம்ப உஷாரா விளையாடுங்க’.. 2 சீனியர் வீரர்களை எச்சரித்த ஹர்பஜன் சிங்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இருவரின் கழுத்துக்கு மேல கத்தி தொங்குவதாக ஹர்பஜன் சிங் எச்சரிக்கை செய்துள்ளார்.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இதனை அடுத்து ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. அதனால் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இந்த சூழலில் நாளை (11.01.2022) கேப் டவுன் மைதானத்தில் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘2-வது டெஸ்ட் போட்டியில் நடந்த ஒரே நல்ல விஷயம் ரஹானே அரை சதம் அடித்ததுதான். அதன்மூலம் அணியில் மீண்டும் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார். இனி அவர் அடிக்கும் அரை சதங்களை, சதங்களாக மாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் தங்களது அனுபவத்தின் காரணமாகவே அணியில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றனர். அவர்களது திறமையை அடுத்தடுத்த போட்டிகளில் நிரூபித்தால் மட்டுமே அணியில் நீடிக்க முடியும். அதனால் அவர்கள் இருவரின் கழுத்துக்கு மேல் எப்போதுமே கத்தி தொங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டியில் இருவரும் சிறப்பாக விளையாடியதால், 3-வது டெஸ்ட் போட்டியில் அவர்கள் விளையாடுவார்கள் என நம்புகிறேன்’ என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். அதனால் இருவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்த 21வது டெஸ்ட் போட்டியில் இருவரும் (ரஹானே 58 ரன்கள், புஜாரா 53 ரன்கள்) அரைசதம் அடித்திருந்தனர். அப்போட்டியில் இந்திய அணி தோல்வி பெற்றிருந்தாலும் இவர்கள் இருவருமே ஆட்டம் கவனிக்கும்படி இருந்தது. அதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் இருவரும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

RAHANE, PUJARA, HARBHAJANSINGH, INDVSA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்