VIDEO: ‘யாரு சாமி நீ..!’.. ஓங்கி ஒரே அடி தான் மிரண்டுபோன பாண்ட்யா.. வாயை பிளந்து பார்க்க வைத்த வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் டி காக் களமிறங்கினர். அதில் டிக் காக் 2 ரன்னில் அவுட்டாகி வெளியேற, சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ரோஹித் ஷர்மா-சூர்யகுமார் யாதவ் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இப்போட்டியில் கொல்கத்தா வீரர் பேட் கம்மின்ஸ் வீசிய ஓவரில் 99 மீட்டர் உயரத்துக்கு சிக்ஸர் விளாசி சூர்யகுமார் யாதவ் அசத்தினார். இதை ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் வியந்து பார்த்தனர். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56 ரன்களும், கேப்டன் ரோஹித் ஷர்மா 43 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை ரசல் 5 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி, ஷாகிப் மற்றும் பிரஷித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் ரானா 57 ரன்களும், சுப்மன் கில் 33 ரன்களும் எடுத்தனர். மும்பை அணியைப் பொறுத்தவரை ராகுல் சாகர் 4 விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளும், க்ருணல் பாண்ட்யா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்