' ஒன் டே மேட்ச்ல சூர்யகுமார் விளையாட சான்ஸ் இல்ல...' 'நான் ஏன் அப்படி சொல்றேன்னா...' - விளக்கம் அளித்த வி.வி.எஸ். லக்ஷ்மன்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் சூர்யகுமார் யாதவ் ஏன் சேர்க்கப்பட மாட்டார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் கூறியுள்ளார்.

அப்போது, 'இந்தியா மற்றும் இங்கிலாத்திற்கு இடையே நடக்கும் ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் விளையாடுவாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால்  டி 20 ஐ கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக விளையாடினாலும், ஏற்கனவே மிகச் சிறப்பாக செயல்பட்ட மற்றவர்களும் இருப்பதால், அவர் விளையாடுவது கடினம் என நினைக்கிறேன்.

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் அந்த நிலைத்தன்மையைக் காட்டிய வீரர்களுடன் அவர் நிச்சயமாக விளையாடுவார் என உறுதியாக சொல்லுவேன். எனவே, என்னைப் பொறுத்தவரை, அவர் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது' என நினைக்கிறேன்.

                                       

ஏனெனில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன், ஸ்ரேயாஸ் 6 வது இடத்தில் பேட் செய்த விதம் அனைவரையும் கவர்ந்தது.

ஒரு நாள் போட்டி மற்றும் டி-20 என இரண்டிலும் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார், முதல்முறையாக அவர் விளையாடும்போது பார்த்தேன், அவர் யாரையும் ஏமாற்றவில்லை.

                                     

சூர்யகுமார் யாதவ் கூட திறமை பெற்ற ஒருவர் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் அனுபவத்துடன் ஒப்பிடும்போது ஸ்ரேயாஸ் ஐயர் சூர்யகுமார் யாதவை விட முன்னதாகவே இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.

                                     

சூர்யகுமார் யாதவ் ஐ.பி.எல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டார், ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் மிக உயர்ந்த மட்டத்தில் கிடைத்த எந்த வாய்ப்புகளிலும் மிகவும் உறுதியான வீரராக காட்டியுள்ளார்.

எனவே, என்னைப் பொறுத்தவரை, சூர்யகுமார் யாதவ் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை. என நினைக்கிறேன்' எனக் கூறியுள்ளார் லக்ஷ்மன்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்