"செம Attitude.." இளம் வீரருக்காக ட்வீட் செய்த சூர்யகுமார்.. கொதித்து எழுந்த ரசிகர்கள்.. சர்ச்சை சம்பவம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடர், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில், நாளை (27.05.2022) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணி, குஜராத் அணியை இறுதி போட்டியில் எதிர்கொள்ளும்.

முன்னதாக, ஐபிஎல் லீக் சுற்றில் பலம் வாய்ந்த அணியான மும்பை இந்தியன்ஸ், 8 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்திருந்தது.

சூர்யகுமார் போட்ட ட்வீட்

தலை சிறந்த வீரர்கள் பலர் அணியில் இருந்த போதும், அவர்கள் ஃபார்ம் அவுட்டில் இருந்ததால், மும்பை அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதனிடையே, சில லீக் போட்டிகள் மீதமிருந்த போது அந்த அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய சூர்யகுமார் யாதவ், காயம் காரணமாக வெளியேறி இருந்தார். இந்நிலையில், ராஜஸ்தான் அணியில் ஆடி வரும் இளம் வீரர் குறித்து, சூர்யகுமார் செய்திருந்த ட்வீட், ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை உண்டு பண்ணி உள்ளது.

அற்புதமான அணுகுமுறை

ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதிய முதல் குவாலிஃபயர் போட்டியில் ஆடிய ராஜஸ்தான் இளம் வீரர் ரியன் பராக் குறித்து சூர்யகுமார் ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில், "களத்தில் அற்புதமான அணுகுமுறை" என குறிப்பிட்டு, ரியான் பராக் பெயருடன் சேர்த்து அவரை பாராட்டி இருந்தார். இந்நிலையில், இந்த கருத்து தான், தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

விமர்சித்த ரசிகர்கள்

இதற்கு காரணம், குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது, தன்னை விட சீனியர் வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரிடம் ரியான் பராக் நடந்து கொண்ட விதம், பெரிய அளவில் பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. அப்படி இருக்கையில், ரியான் பராக்கை பாராட்டி சூர்யகுமார் தெரிவித்திருந்த கருத்து பற்றி, ரசிகர்கள் விமர்சனம் செய்யத் தொடங்கினர்.

சூர்யகுமார் விளக்கம்

இதன் பின்னர், இதுகுறித்து தனது விளக்கத்தை அளித்திருந்தார் சூர்யகுமார். அதாவது, ரியான் பராக் ஃபீல்டிங்கை தான் நான் பாராட்டி இருந்தேன் என்றும், இதனால் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்றும், தனது தரப்பிலான விளக்கத்தை சூர்யகுமார் அளித்திருந்தார். இது தொடர்பான பதிவுகள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

SURYAKUMAR YADAV, RIYAN PARAG, சூர்யகுமார், ரியான் பராக்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்