‘டிரெண்ட் போல்ட்டுக்கு தான் நன்றி சொல்லணும்’!.. போட்டி முடிந்ததும் குறும்பாக கிண்டலடித்த சூர்யகுமார்.. ஏன் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மார்டின் கப்தில் 70 ரன்களும், மார்க் சாப்மன் 63 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியைப் பொறுத்தவரை அஸ்வின் மற்றும் புவனேஷ்வர்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தீபக் சஹார் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 19.4 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 62 ரன்களும், ரோஹித் ஷர்மா 48 ரன்களும் எடுத்தனர். இதில் சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய சூர்யகுமார் யாதவ், ‘என்னால் எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட முடியும். அதற்கு ஏற்றார் போல் என்னை தயார்படுத்திக் கொள்வேன். 7-வது வரிசை வரை விளையாடி இருக்கிறேன். அதனால் எந்த வரிசையில் விளையாடினாலும் எனக்கு மகிழ்ச்சிதான். ஐபிஎல் தொடரில் கடந்த மூன்று ஆண்டுகளாக 3-வது வரிசையில்தான் விளையாடி வருகிறேன்’ என அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘என்னுடைய கேட்சை தவறவிட்டதற்கு டிரெண்ட் போல்ட்டுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் அன்று என் மனைவியின் பிறந்தாநாள்’ என சிரித்துக்கொண்டே சூர்யகுமார் யாதவ் கிண்டலாக கூறினார்.
போட்டியின் 16-வது ஓவரின் போது சூர்யகுமாரின் கேட்ச் ஒன்றை டிரெண்ட் போல்ட் தவறவிட்டார். ஆனாலும் டிரெண்ட் போல்ட் வீசிய 17-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் போல்டாகி வெளியேறினார். இருவரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாக விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டி20 கேப்டனாக முதல் போட்டி.. டாஸ் ஜெயிச்சதும் ‘ரோஹித்’ சொன்ன வார்த்தை.. அப்போ இனிமேல்தான் ‘வெறித்தனமான’ சம்பவம் இருக்குபோல..!
- திடீரென வைரலாகும் ரோஹித் ஷர்மாவின் ‘9 வருட’ பழைய ட்வீட்.. அப்படி என்ன சொல்லியிருக்காரு..?
- கேன் வில்லியம்சனை தொடர்ந்து திடீரென ‘விலகிய’ மற்றொரு வீரர்.. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் அடுத்தடுத்து விலகும் நியூஸிலாந்து வீரர்கள்.. என்ன காரணம்..?
- ‘வீரர்கள் ஒன்னும் மெஷின் கிடையாது’.. செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஹித் ஷர்மா பரபரப்பு கருத்து..!
- இனி அணியில் விராட் கோலியின் ரோல் என்ன..? இந்திய டி20 கேப்டன் ‘ரோஹித் ஷர்மா’ சொன்ன பதில்..!
- VIDEO: ‘ஆட்டம் ஆரம்பம்’!.. புது கோச், புது கேப்டன்.. வெறித்தனமான வீடியோ வெளியிட்ட பிசிசிஐ..!
- இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து திடீரென விலகிய கேன் வில்லியம்சன்.. என்ன காரணம்..? அப்போ கேப்டன் யார்..?
- ‘இந்திய அணியின் எதிர்காலம்’!.. 3 ஃபார்மேட்களிலும் எப்படி கலக்கப்போறாரு பாருங்க.. சிஎஸ்கே வீரரை புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்..!
- ‘முடிவுக்கு வந்த நீண்ட நாள் காத்திருப்பு’!.. இளம் விக்கெட் கீப்பருக்கு அடிச்ச அதிர்ஷ்டம்.. பிசிசிஐ வெளியிட்ட லிஸ்ட்..!
- ரோஹித் இல்ல.. இந்திய டி20 அணிக்கு ‘கேப்டன்’ இவர்தானா..? கசிந்த தகவல்..!