‘இவர்தான் ரைட் சாய்ஸ்’... ‘கோலி ஊருக்கு திரும்பும் நேரத்தில்’... ‘தேடி வரும் சான்ஸ்???... ‘ட்விஸ்ட்டுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த ஆண்டின் ஐபிஎல் சீசனில் சாதித்து வரும், சூர்ய குமார் யாதவிற்கு ஆஸ்திரேலிய தொடரில் , கேப்டன் விராத் கோலிக்கு பதிலாக வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில், இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்த ஆஸ்திரேலிய தொடரில், இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர் தேர்வாகி உள்ளனர். முக்கியமாக ஐபிஎல் தொடரில் இந்த முறை வீரர்கள் ஆடிய விதத்தை வைத்து, பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் மூலம் வருண் சக்ரவர்த்தி, நடராஜன், சைனி உள்ளிட்ட பலர் ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு பெற்றுள்ளனர். 

ஆனால் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும், மும்பை வீரர் சூர்ய குமார் யாதவ், ஆஸ்திரேலியா செல்லும் அணியில் இடம்பெறவில்லை. தொடர்ந்து 3 வருடங்களாக இவர் சிறப்பாக ஆடியும் கூட இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும் சூர்ய குமார் யாதவை கோலி வேண்டுமென்றே அணியில் எடுக்கவில்லை. அரசியல் செய்கிறார் என்று புகார் உள்ளது. ரோகித் சர்மாவிற்கு, சூர்ய குமார் நெருக்கமாக இருப்பதனால்தான் ஐபிஎல் களத்தில் விராத் கோலி, சூர்ய குமார் யாதவிடம் கோபமாக செயல்படுகிறார் என்றும், விராத் கோலிக்கு ஈகோ அதிகமாக இருப்பதால் இப்படி சூர்ய குமார் யாதவை புறக்கணிக்கிறார் என்றும் சர்ச்சைகள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், இந்திய கேப்டன் விராத் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது. அவரது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு அடுத்த மாத இறுதியில் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதால், அவர் தொடரில் இருந்து பாதியில் வெளியேறும் வாய்ப்பு காணப்படுவதால், அவரின் இடத்தில் சூர்யகுமார் யாவை கொண்டு வரவேண்டும் என முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா உட்பட பலர், பிசிசிஐ-க்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இவரை அணியில் எடுத்தால் தன்னை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால் சூர்யகுமார் யாதவுக்கு சான்ஸ் கிடைக்குமா என முன்னாள் வீரர்கள் காத்துள்ளனர். அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் சூர்ய குமார் யாதவை பாராட்டி உள்ளார். இதனால் இதுதான் அவரை அணியில் எடுக்க சரியான நேரம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கூறியுள்ளதுடன் அடுத்த என்ன நடக்கும் என்று ஆவலுடன் காத்துள்ளனர்.

சூர்யகுமார் யாதவ் கடந்த 2018 ஐபிஎல் தொடரில் 512 ரன்களும், 2019 தொடரில் 424 ரன்களும், தற்போதைய ஐபிஎல் தொடரில் இப்போதே 461 ரன்களும் எடுத்து 41.90 ரன்ரேட் ஆவரேஜ் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்