சூர்யகுமார் யாதவ் அடிச்ச 'சிக்ஸ்'.. "அடேங்கப்பா, இப்டி ஒரு அற்புதமான ஷாட்டா?".. மிரட்டல் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி தற்போது மழை காரணமாக முடிவு தெரியாமல் பாதியிலேயே கைவிடப்பட்டது.

Advertising
>
Advertising

டி 20 உலக கோப்பைத் தொடரை முடித்த கையுடன் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.

விராட் கோலி, ரோஹித் ஷர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையில், டி 20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடருக்கு முறையே ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதில், முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை இந்திய கிரிக்கெட் அணி 1 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி இருந்தது. டி 20 தொடரிலும் மழை குறுக்கிட்டதன் காரணமாக, முதல் போட்டி நிறுத்தப்பட்டது. இரண்டாவது போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், மூன்றாவது போட்டிக்கு நடுவே மழை குறுக்கிட்டது. இதனால், DLS முறைப்படி போட்டி டை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

டி 20 தொடரை தொடர்ந்து, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில், டாம் லதாம் சதமடித்து அசத்தி இருந்தார். அவரும் கேப்டன் வில்லியம்சனும் 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் சேர்க்க, நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி, இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது மழை குறுக்கிட்ட நிலையில், போட்டி நிறுத்தப்பட்டது. மீண்டும் தொடர்ந்த போது 29 ஓவர்களாகவும் குறைக்கப்பட்டிருந்தது. 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 89 ரன்களை இந்திய அணி எடுத்திருந்த போது, மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனையடுத்து, தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது.

இரண்டு போட்டிகளுக்கு பிறகு நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கும் நிலையில், கடைசி ஒரு நாள் போட்டி, நவம்பர் 30 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் அடித்த சிக்ஸ் குறித்த விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் வித்தியாசமான கிரிக்கெட் ஷாட்கள் அடித்து பலரையும் கவனிக்க வைத்து வருகிறார் சூர்யகுமார் யாதவ். அந்த வகையில், இந்த போட்டியிலும் ஷிகர் தவான் அவுட்டான பிறகு ஆட வந்த சூர்யகுமார், மழை குறுக்கிடுவது வரை ஆடி இருந்த நிலையில், 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 ஃபோர்களுடன் 34 ரன்கள் எடுத்திருந்தார்.

அப்போது, பிரேஸ்வெல் வீசிய 12 ஆவது ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடித்த சூர்யகுமார், அதனை சிக்சருக்கு பறக்க விட்டிருந்தார். சிறப்பான டைமிங்குடன் சூர்யகுமார் அடித்திருந்த நிலையில், அவரது முதல் ஸ்வீப் ஷாட் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் புதிது புதிதாக கடினமான ஷாட்களை அடித்து கவனத்தை ஈர்த்து வரும் சூர்யகுமாரின் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டும் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.

 

SURYAKUMAR YADAV, IND VS NZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்