'கோலி' கிட்ட இருந்து கத்துக்கணும்..." பல போராட்டங்களுக்கு பின் கிடைத்த 'வாய்ப்பு'... "சூர்யகுமார் யாதவ் சொன்னது இது தான்"!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதற்கு அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெறவுள்ளது.

இதற்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஐபிஎல் சீசனில் ஜொலித்த வீரர்கள் சிலருக்கு சர்வதேச இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைத்துள்ளது. வருண் சக்ரவர்த்தி, இஷான் கிஷான், ராகுல் டெவாட்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் சூர்யகுமார் யாதவ், கடந்த ஐபிஎல் சீசன் மட்டுமில்லாது, தொடர்ந்து பல சீசன்களிலும், முதல் தர போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகிறார். ஆனாலும், ஏன் அவருக்கு சர்வதேச அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அது மட்டுமில்லாமல், கடந்த ஐபிஎல் சீசனில் சூர்யகுமார் யாதவ், இந்திய கேப்டன் கோலியை நேருக்கு நேராக பார்த்துக் கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகம் வைரலாகி இந்திய அணி வேண்டுமென்றே அவரை புறக்கணிக்கிறது என்பது போன்ற கருத்துக்கள் வெளியாகி பரபரப்பை உண்டு பண்ணியது.

இதனையடுத்து, தற்போது அவருக்கு சர்வதேச அணியில் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் கூறுகையில், 'இந்திய அணியிலுள்ள சீனியர் வீரர்களுடன் எப்படி நேரத்தை கழிக்க போகிறேன் என்பது பற்றி இப்போதே ஆலோசனை செய்யத் தொடங்கி விட்டேன். கேப்டன் விராட் கோலியிடம் அனுபவத்தில் இருந்து நான் நிறைய கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

ரோஹித் ஷர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களுடன் சிறந்த நேரத்தை செலவிட விரும்புகிறேன். நான் ஐபிஎல் போட்டிகள் ஆடி வந்த போதே, இந்திய அணிக்காக வெற்றிகளை பெற்றுத் தர வேண்டும் என கனவு கண்டேன். அதற்கான வாய்ப்பு சரியான நேரத்தில் எனக்கு கிடைத்துள்ளது. பயிற்சியை முடித்து விட்டு, அறையில் உட்கார்ந்திருந்த போது, நான் அணியில் இடம் பிடித்திருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என்னைச் சுற்றி பட்டாம்பூச்சிகள் பறந்தது' என்றார்.

மேலும், இந்திய அணியின் செயல்பாடு குறித்து சூர்யகுமார் யாதவ் கூறுகையில், 'கடந்த சில காலங்களாக இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது. ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் அவர்கள் ஆடும் விதம் நம்ப முடியாத வகையில் உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் வைத்து வரலாற்று சிறப்புமிக்க இந்திய அணி வென்ற பின்னர், மற்ற அணிகளை விட இந்திய அணியின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்த முறை, இந்திய மண்ணில் நடைபெறும் டி 20 உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என நான் நம்புகிறேன்' என அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்