"அவர ஏங்க 'டீம்'ல எடுக்கல??.. 'இதுக்கு மேல என்னத்த 'பெர்ஃபார்ம்' பண்ணனுமாம்??..." கடுப்பான 'ரசிகர்'கள்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஒரு நாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளை விளையாடவுள்ளது.

மூன்று வடிவிலான போட்டிகளுக்குமான இந்திய அணியை பிசிசிஐ சற்று முன் வெளியிட்டது. இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வரும் இளம் வீரர்களான வருண் சக்ரவர்த்தி, சுப்மான் கில் போன்றவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வரும் சூர்யகுமார் யாதவை ஏன் இந்திய அணியில் எடுக்கவில்லை என ரசிகர்கள் ட்விட்டரில் கொந்தளித்து வருகின்றனர். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வந்த சூர்யகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடியுள்ளார்.

பல சீசன்களாக தொடர்ந்து மிகச் சிறப்பாக ஆடி வரும் சூர்யகுமார், இதுவரை ஒரு சர்வதேச போட்டிகளில் கூட இந்திய அணிக்காக விளையாடிதில்லை. இந்த சீசனிலும் நல்லவொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

ஆனால், இன்று பிசிசிஐ அறிவித்த இந்திய அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால், ரசிகர்கள் கோபத்துடன் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். தொடர்ச்சியாக, ஐபிஎல் சீசன்களில் மிக சிறப்பான ஆட்டத்தை சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்தி வருகின்றார். இதை விட அவர் அணியில் இடம் பெற என்ன திறமை வேண்டும் என்ற கேள்விகளை ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். 

















 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்