"தாய் பாசத்துக்கு எதுவும் ஈடாகாது".. சூர்யகுமார் செஞ்சுரி அடிச்சதும் அம்மா செஞ்ச விஷயம்.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி 20 உலக கோப்பை தொடரில் அரை இறுதி போட்டி வரை முன்னேறி இருந்த இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்வியின் காரணமாக அத்துடன் வெளியேறி இருந்தது.

"தாய் பாசத்துக்கு எதுவும் ஈடாகாது".. சூர்யகுமார் செஞ்சுரி அடிச்சதும் அம்மா செஞ்ச விஷயம்.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்!!
Advertising
>
Advertising

Also Read | தமிழறிஞர் ஔவை நடராசன் மறைவு.. இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.!

உலக கோப்பை தொடரை தொடர்ந்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, அங்கே கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது.

ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், டி 20 அணியை ஹர்திக் பாண்டியாவும், ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியை ஷிகர் தவானும் தலைமை தாங்குகின்றனர்.

Suryakumar yadav mother emotional after son hits century

மேலும், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரும் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது.

இந்த போட்டியில், சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 11 ஃபோர்கள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 111 ரன்கள் எடுத்திருந்தார். டி 20 போட்டியில் அவரது இரண்டாவது சதமாகவும் இது பதிவானது. மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விரட்டிய சூர்யகுமார் யாதவ் மேஜிக்கை தான் பேட்டிங் என்ற பெயரில் செய்து வருகிறார். பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கூட சூர்யகுமார் யாதவ் பேட்டிங் குறித்து வியப்பில் ஏராளமான கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், சூர்யகுமாரின் அதிரடியை பார்த்து அவரது தாய் செய்த விஷயம், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சூர்யகுமார் சதமடித்த விஷயத்தை அவரது குடும்பத்தினரும் பெரிதாக டிவியில் பார்த்து கொண்டாடினர். அந்த சமயத்தில், சூர்யகுமார் தந்தை கைதட்டி மகனின் சதத்தை கொண்டாடிய நிலையில், தாயாரும் டிவியில் சூர்யகுமார் முகத்தை க்ளோஸாக காட்டியதும் டிவி ஸ்க்ரீனை துடைத்து வருடவும் செய்தார். மகனின் சாதனையை எண்ணி பெற்றோர்கள் பெருமை கொள்ளும் இந்த நிகழ்வை சூர்யகுமாரின் சகோதரி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக தெரிகிறது.

Also Read | "வீடியோ கேம் மாதிரி இருக்கே".. சூர்யாகுமார் பேட்டிங் பாத்துட்டு கோலி கொடுத்த ரியாக்ஷன்.. பதிலுக்கு SKY சொன்ன வைரல் பதில்!!

CRICKET, SURYAKUMAR YADAV, SURYAKUMAR YADAV MOTHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்