‘பாக்கதான போறீங்க இந்த பாண்ட்யாவோட ஆட்டத்த’!.. சூர்யகுமார் கொடுத்த ‘மிரட்டல்’ அப்டேட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை தொடரில் விளையாட உள்ள ஹர்திக் பாண்ட்யா குறித்து சூர்யகுமார் யாதவ் முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

‘பாக்கதான போறீங்க இந்த பாண்ட்யாவோட ஆட்டத்த’!.. சூர்யகுமார் கொடுத்த ‘மிரட்டல்’ அப்டேட்..!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா ஏ அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜூலை 13-ம் தேதி தொடங்க உள்ளது.

Suryakumar Yadav gives update on Hardik Pandya's bowling

இப்போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் நேற்று இண்ட்ரா ஸ்குவாட் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினர். இதில் இளம் வீரர்கள் ருத்ராஜ் கெயிக்வாட், மணிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டனர். பயிற்சிகள் தொடங்கியுள்ள நிலையில், இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் குறித்த கேள்விகள் எழுந்து வருகின்றன. இதில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறுவாரா? என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

Suryakumar Yadav gives update on Hardik Pandya's bowling

இதற்கு காரணம் ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சுதான். கடந்த 2019-ம் ஆண்டு காயத்தால் பாதிக்கப்பட்ட அவர், அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின் பந்துவீச்சில் ஈடுபடவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு ஓவர் கூட பாண்ட்யா வீசவில்லை. அதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் சில ஓவர்களே அவர் வீசினார். இதன்காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் உடற்தகுதி குறித்து சூர்யகுமார் யாதவ் பகிர்ந்துள்ளார். அதில், ‘ஆஸ்திரேலியா மற்றும் ஐபிஎல் தொடர்களில் பாண்ட்யா பந்துவீச்சில் ஈடுபடவில்லைதான். ஆனால் இங்கிலாந்து தொடரில் பாண்ட்யா சிறப்பாக பந்துவீசினார். தற்போது இண்ட்ரா ஸ்குவாட் போட்டியிலும் மிகச்சிறப்பாகவே பந்து வீசியுள்ளார். ஆனாலும் அணி நிர்வாகம்தான் அவரின் ஃபார்ம் குறித்து முடிவெடுக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை அவரிடம் நல்ல நம்பிக்கை தெரிகிறது’ என சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார். இதன்மூலம் இலங்கை தொடரில் தனது பழைய அதிரடி ஆட்டத்தை ஹர்திக் பாண்ட்யா வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்