"அவர் ஒரு ஜீனியஸ்".. வெற்றி வாகை சூடிய கையோடு.. புகழ்ந்து தள்ளிய 'சிஎஸ்கே'வின் ஆல் ரவுண்டர் 'குட்டி பையன்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

‘தோனி ஒரு ஜீனியஸ்’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் ஆல்ரவுண்டர் சாம் கரன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் சீசன் 13ன் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பின்னர் களம் இறங்கிய மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுக்க,  163 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் வாட்சன் 4 ரன்களிலும், விஜய் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.  பின்னர் டூ பிளசி, ராயுடு  ஜோடி கூட்டணி அணியைச் சரிவிலிருந்து மீட்டது.

அதிரடியாக ஆடிய ராயுடு 71 ரன்கள் விளாசினார். அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் களமிறக்கப்பட்ட சென்னை அணியின் கடைக்குட்டி சிங்கம் சாம் குர்ரன் 6 பந்துகளில் 18 ரன்களை விளாசினார். அதன் பிறகு ஆட்டமிழந்தார். 4 பந்துகள் எஞ்சியிருந்த நிலையிலேயெ சென்னை அணி வெற்றி இலக்கை கடந்தது, இதனால் சி.எஸ்.கே. கேப்டனாக தோனி தமது தலைமையிலான 100 ஆவது வெற்றியைப் பதிவு செய்தார்.

இப்போட்டி முடிந்து பேசிய சாம் கரன் “சென்னை வந்ததும் நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். பெரிதாக எதையும் சிந்திக்கவும் இல்லை, நிறைய வீரர்களையும் சந்திக்கவுமில்லை. சென்னை வந்த 2 நாட்களில் தோனியை சென்று சந்தித்தேன். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. உண்மையாகவே அவர் ஒரு ஜீனியஸ்.” என்று புகழாரம் சூட்டினார்.

மேலும் பேசியவர், “களத்தில் ஒரு பக்கம் இடது கை பேட்ஸ்மேனும், மற்றொரு பக்கம் வலது கை பேட்ஸ்மேனுமாக நாங்கள் நின்றோம். அடித்தால் சிக்ஸ் அல்லது அவுட் என்ற என்கிற கணக்கையே நாங்கள் டார்க்கெட் செய்ய நினைத்தோம்” என்று  குறிப்பிட்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்