"என்ன சத்தமே வரல".. கம்முன்னு இருந்த ஆடியன்ஸ்.. சைலண்டா சூரியகுமார் யாதவ் கொடுத்த சிக்னல்.. தெறி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - வங்கதேச அணிகள் மோதிய T20 கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்களுக்கு சூரிய குமார் யாதவ் சிக்னல் கொடுக்க, ரசிகர்கள் கரகோஷம் மைதானத்தையே நிறைத்துவிட்டது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக பரவி வருகிறது.

"என்ன சத்தமே வரல".. கம்முன்னு இருந்த ஆடியன்ஸ்.. சைலண்டா சூரியகுமார் யாதவ் கொடுத்த சிக்னல்.. தெறி வீடியோ..!
Advertising
>
Advertising

Also Read | "நோ.. இப்படி ட்ரை பண்ணு".. சிறுவனுக்கு கராத்தே டெக்னிக் சொல்லிக்கொடுத்த ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ..!

T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்று போட்டிகள், இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், எந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்பது குறித்த விறுவிறுப்பு தற்போதே அதிகரித்துள்ளது. இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி குரூப் 2 வில் இடம்பெற்றுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியைடைந்திருந்தது இந்திய கிரிக்கெட் அணி.

Suriya Kumar yadhav signal to audience in India vs Bangladesh

அரையிறுதிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி கடந்த புதன்கிழமை வங்கதேசத்தை எதிர்கொண்டது. அடிலெய்டில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 186 ரன்கள் எடுத்திருந்தது. இதில் விராட் கோலி ஒரு சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் குவித்தார். முதல் மூன்று போட்டிகளிலும் பெரிதும் சோபிக்காத ராகுல் இந்த போட்டியில் அபாரமாக ஆடி அரை சதமடித்தார்.

இதனையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. துவக்க ஆட்டக்காரரான லிட்டன் தாஸ் 27 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இதனிடையே மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் போட்டி 16 ஓவர்களாகவும் டார்கெட் 151 ஆகவும் மாற்றப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் க்ரூப் 2 பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.

இந்தப் போட்டியில் வங்கதேச அணி பேட்டிங்கில் இருந்தபோது மழை குறுக்கிட்டு பின்னர் இலக்கும், ஓவர்களும் குறைக்கப்பட்டது. இதனையடுத்து, போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, இந்திய ரசிகர்களிடம் தனது ஜெர்சியில் இருந்த இந்தியா-வை சுட்டிக்காட்டினார் சூரிய குமார் யாதவ். உடனடியாக ரசிகர்கள் இந்தியா, இந்தியா என கோஷமிட்ட, காதில் கைவைத்து கேட்கவில்லை என்பதுபோல ஜாடை செய்தார் சூரியகுமார் யாதவ். இதனையடுத்து ரசிகர்களின் முழக்கத்தில் மைதானமே அதிர்ந்து போனது. இந்நிலையில் இந்த வீடியோவை ICC தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

 

Also Read | AAVIN MILK PRICE HIKE: ஆவின் அரை லிட்டர் ஆரஞ்ச் பால் விலை 6 ரூபாய் உயர்வு.!

CRICKET, SURIYA KUMAR YADHAV, INDIA VS BANGLADESH, T20 WORLD CUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்