போச்சுடா.. பிரபல இந்திய வீரருக்கு அறுவை சிகிச்சை.. அடுத்த 5 மாதங்கள் ஓய்வு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஷ்ரேயாஸ் அய்யருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்திருக்கின்றனர். இதனையடுத்து அவர் அடுத்த சில மாதங்களுக்கு ஓய்வில் இருப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!
கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர்
தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. இந்திய அணியில் நீண்ட காலத்திற்கு பிறகு உள்ளே வந்திருந்த ஷ்ரேயாஸ் அய்யர் நான்காவது போட்டியில் காயமடைந்தார். இதனையடுத்து அவர் பேட்டிங் செய்யாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Images are subject to © copyright to their respective owners.
காயம்
இந்நிலையில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்திருக்கின்றனர். இதனையடுத்து, ஷ்ரேயாஸ் அய்யர் அடுத்த 5 மாதங்களுக்கு ஓய்வில் இருப்பார் என தெரிகிறது. இதன் காரணமாக வரவிருக்கும் உலகக்கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், ஐபிஎல் ஆகிய தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
பும்ரா
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஐஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக அணியில் இருந்து நீண்ட நாட்களாக விலகி இருக்கிறார். சமீபத்தில் அவருக்கு நியூசிலாந்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றிருந்தது. உலகக் கோப்பைக்குள் பும்ரா மீண்டு வருவாரா? என ரசிகர்களிடையே கேள்வி எழுந்த நிலையில் தற்போது ஷ்ரேயாஸ் அய்யருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இதனிடையே ஒருவேளை ஷ்ரேயாஸ் அய்யர் அணிக்கு திரும்பவில்லை எனில், அவருக்கு அவருக்கு பதிலாக யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும்? என்பது குறித்தும் ரசிகர்கள் இப்போதே விவாதித்து வருகின்றனர்.
Also Read | எப்படி இருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்?.. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கோலியை தவிர எந்த பேட்ஸ்மேன் இருந்திருந்தாலும் அந்த போட்டியில பாகிஸ்தான் தான் ஜெயிச்சிருக்கும்" - மிஸ்பா உல் ஹக்.!
- தோனிக்கு இந்த IPL சீசன் தான் கடைசியா?.. வாட்சன் கொடுத்த ரிப்ளை.. கொண்டாடும் Fans..!
- "யாருமே அதை பத்தி பேசுறது இல்ல"... ஷாக் கொடுத்த இரண்டாவது ODI.. ரோஹித் ஷர்மா Open Talk..
- அது டீம் இல்ல.. குடும்பம்... CSK அணியில் விளையாடிய நாட்கள்.. ஹர்பஜன் சிங் உருக்கம்..!
- "சேம்பியன் மீண்டு வருவான்"... ரிஷப் பண்டை சந்தித்த லெஜெண்ட் யுவராஜ்.. வைரலாகும் புகைப்படம்..!
- "நான் ஒருமுறை கூட CUP அடிக்கல.. ஆனா நமக்கு Fans".. தொடர் தோல்வியில் RCB மகளிர் அணி.. கோலி கொடுத்த அட்வைஸ்.. வீடியோ..!
- "அவரு டீம்-ல இல்லாதது".. டெல்லி கேப்பிடல்சின் புது கேப்டன் வார்னர்.. ரிஷப் பண்ட் பற்றி உருக்கம்..!
- "சிக்ஸர் பறந்ததுக்கா இப்டி?".. முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரரிடம் திடீர்ன்னு வாக்குவாதம் செய்த பாகிஸ்தான் வீரர்.. அதிர்ச்சியை உண்டு பண்ணிய வீடியோ!!
- "கோலிக்கு இன்னைக்கு இருக்க பிரச்சனை சச்சினுக்கும் இருந்துச்சு".. லெஜெண்ட் டிராவிட் சொன்ன விஷயம்..!
- "மீண்டும் மீண்டுமா?".. சிவனேன்னு இருந்த வாகனை ஜாலியா சீண்டிய வாசிம் ஜாஃபர்.. வைரல் ட்வீட்!!