'இந்த பிரச்சனைதான்'... 'ரெய்னா ஐபிஎல் தொடரிலிருந்தே விலக காரணமா?... 'சிஎஸ்கே உரிமையாளர் பரபரப்பு பேட்டி!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடு காரணமாகவே சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தாண்டு ஐபிஎல் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளதால் அனைத்து அணிகளும் அங்கு சென்றுள்ளன. செப்டம்பர் 19ஆம் தேதி போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட உள்ளது. இந்த சூழலில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பின்னர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரெய்னாவின் மாமா கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்டதே அவர் போட்டியிலிருந்து விலகி நாடு திரும்ப காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், அவுட் லுக் பத்திரிகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் என்.சீனிவாசன் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், "நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால் தாராளமாகப் போகலாம். நான் எதற்கும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. சில நேரங்களில் உங்கள் வெற்றி தலைக்குச் சென்றுவிடும். சில கிரிக்கெட்டர்கள் பழைய நடிகர்களைப் போல நடந்து கொள்கிறார்கள். ஐபிஎல் இன்னும் தொடங்கவில்லை. நிச்சயம் ரெய்னா இழக்கப்போகும் பணம் குறித்து விரைவில் புரிந்து கொள்வார்.

நான் தோனியுடன் பேசியபோது, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கவலை அடைய வேண்டாம் என அவர் எனக்கு உறுதியளித்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா தனக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல் அறை குறித்து புகார் தெரிவித்ததாகவும், தோனியின் அறை போல தனக்கு வேண்டும் எனக் கேட்டதால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே அவர் விலகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்