IPL 2022 : "அவருக்காக இந்த டீம் தான் கப் ஜெயிக்கணும்.." முன்னாள் 'CSK' வீரர் ரெய்னாவின் விருப்பம் என்ன??..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடர், பிளே ஆப் சுற்றின் முதல் போட்டி, இன்று (24.05.2022) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

முதல் குவாலிஃபையர் போட்டியான இதில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

தோல்வி அடையும் அணி, எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோத வேண்டும். அதில் வெற்றி பெறும் அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

ஆதிக்கம் செலுத்திய குஜராத், லக்னோ அணிகள்

கடந்த ஐந்து சீசன்களாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருந்த இரண்டு அணிகளான மும்பை இந்தியன்ஸ் (3 முறை) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (2 முறை) ஆகிய அணிகள், இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி உள்ளது. அதே போல, நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய அணிகளாக உள்ளே வந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள், வந்த வேகத்திலேயே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டு விட்டது.

குஜராத் மற்றும் லக்னோ அணிகளைத் தவிர, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளன. இதில், ராஜஸ்தான் அணி அறிமுக ஐபிஎல் தொடரில் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி இருந்தது. அதன் பின்னர், இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை அந்த அணி வென்றதில்லை.

இதனைத் தொடர்ந்து, பெங்களூர் அணி, இதுவரை 3 முறை ஐபிஎல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால், ஒருமுறை கூட கோப்பையைக் கைப்பற்றியது கிடையாது. அந்த வகையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ள 4 அணிகளில், ராஜஸ்தான் மட்டும் தான் ஒரு முறை, அதுவும் முதல் சீசனில் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

சுரேஷ் ரெய்னா சொன்ன பதில்

இதனால், பல சீசன்களுக்கு பிறகு, ஒரு அணி புதிதாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றவுள்ளதை காணவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அது மட்டுமில்லாமல், கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் எந்த அணி இந்த முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது என்பதையும் கணித்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ள விஷயமும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

"இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை ஆர்சிபி தான் வெல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன். இதற்கு முக்கிய காரணம் விராட் கோலி தான். அவருக்காக இந்த முறை பெங்களூர் அணி கோப்பையைக் கைப்பற்ற வேண்டும்" என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, எலிமினேட்டர் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை நாளை (25.05.2022) சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SURESHRAINA, VIRATKOHLI, RCB, IPL 2022, PLAYOFFS, சுரேஷ் ரெய்னா, விராட் கோலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்