என் மகளோட ரீசெண்டா பார்த்த ‘தமிழ்’ படம் இதுதான்.. TNPL மேட்சுக்கு நடுவே சர்ப்ரைஸ் கொடுத்த ‘சின்ன தல’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சமீபத்தில் மகளுடன் பார்த்த தமிழ் திரைப்படம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பகிர்ந்துள்ளார்.

என் மகளோட ரீசெண்டா பார்த்த ‘தமிழ்’ படம் இதுதான்.. TNPL மேட்சுக்கு நடுவே சர்ப்ரைஸ் கொடுத்த ‘சின்ன தல’!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி லைக்கா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

Suresh Raina shares his experience on watching Vijay's Master film

18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை லைக்கா கோவை கிங்ஸ் அணி எடுத்தது. அப்போது திடீரென மழை குறுக்கிட்டதால், ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இப்போட்டியில் சாய் சுதர்சன் 43 பந்துகளில் 87 ரன்கள் (8 பவுண்டரி, 5 சிக்சர்) அடித்து அசத்தியிருந்தார்.

Suresh Raina shares his experience on watching Vijay's Master film

இந்த நிலையில், இப்போட்டியில் வர்ணனையாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சமீபத்தில் பார்த்த தமிழ் திரைப்படம் எது? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரெய்னா, ‘எனது மகளுடன் இந்தி டப்பிங்கில் மாஸ்டர் படம் பார்த்தேன். விஜய் நல்ல நடிகர். அதில் அவரது நடிப்பு பிடித்திருந்தது’ என அவர் பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து தமிழில் பிடித்த பாடல் எது? என கேட்டபோது, ‘முன்பே வா அன்பே வா..’ என்ற பாடல் பிடிக்கும் என்று கூறி பாடியும் காட்டினார். மேலும், தனக்கு பிடித்த நடிகர் சூர்யா என சுரேஷ் ரெய்னா கூறியதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்