முன்னாள் சிஎஸ்கே வீரர் பகிர்ந்த வீடியோ.. ஸ்பெஷல் மெசேஜ் சொன்ன 'சுரேஷ் ரெய்னா'.. "மனுஷன் சுத்த தங்கம்யா"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா மற்றும் பாப் டு பிளஸ்ஸிஸ் ஆகிய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

Advertising
>
Advertising

அது மட்டுமில்லாமல், கடந்த முறை ஐபிஎல் கோப்பையையும் சென்னை அணி தான் கைப்பற்றி அசத்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெற்றிருந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக, டு பிளஸ்ஸிஸ் மற்றும் ரெய்னா ஆகியோரை தக்க வைத்துக் கொள்ளாத சென்னை அணி, அவர்களை அணியில் இருந்து விடுத்திருந்தது.

ரெய்னா 'Unsold'

மேலும், ஏலத்தின் போது இருவரையும் எடுக்க சிஎஸ்கே அணி முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. இதில், ரெய்னாவை சிஎஸ்கே உள்ளிட்ட எந்த அணிகளும் எடுக்க முன் வரவில்லை. இதனால், அவர் 'Unsold' என அறிவிக்கப்பட்டிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தியிருந்தது. இன்னொரு பக்கம், டு ப்ளஸிஸ்ஸை ஏலத்தில் எடுத்த பெங்களூர் அணி, புதிய கேப்டனாகவும் அவரை சமீபத்தில் அறிவித்திருந்தது.

புதிய கேப்டன் டு பிளஸ்ஸிஸ்

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ள டு பிளெஸ்ஸிஸ், தற்போதைய ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்படவுள்ளதைக் காண பெங்களூர் அணியின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதுவரை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றாத பெங்களுர் அணியின் விதியை டு பிளெஸ்ஸிஸ் மாற்றி எழுதுவார் என்ற நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே வேளையில், ரெய்னா இல்லாத ஐபிஎல் என்பதால், அவரது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

காத்திருக்கிறேன்

இந்நிலையில், பெங்களூர் அணிக்கு வேண்டி பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை டு பிளஸ்ஸிஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், "ஐபிஎல் சீசனில் மீண்டும் ஆடுவதற்கான வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. அனைத்தையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

டு பிளஸ்ஸிஸ் பதிவின் கீழ், சென்னை அணி வீரரான ருத்துராஜ், டெல்லி அணி வீரரான நொர்ஜே உள்ளிட்ட பலர் வாழ்த்தி கமெண்ட் செய்திருந்தனர். அந்த வகையில், சுரேஷ் ரெய்னாவும் டு ப்ளஸிஸ்ஸை பாராட்டி பதிவிட்டுள்ள கமெண்ட், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ரெய்னா போட்ட கமெண்ட்

"வாழ்த்துக்கள் கேப்டன். நன்றாக ஆடுங்கள்" என குறிப்பிட்டுள்ளார். இதற்கு டு பிளஸ்ஸிஸ் தன்னுடைய நன்றிகளையும் தெரிவித்துள்ளார். சென்னை அணி ரெய்னாவை ஏலத்தில் எடுக்காமல் போனதால், அவருக்கும் சென்னை அணிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. ஆனால், தொடர்ந்து சென்னை அணியின் பதிவில் கமெண்ட்டுகளை செய்து, அவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளிகளை ரெய்னா வைத்திருந்தார்.

அந்த வகையில், தன்னுடைய ஆடிய வீரரை மறக்காமல், ஐபிஎல் தொடருக்கு முன்பாக அவருக்கு வாழ்த்துக்களை ரெய்னா தெரிவித்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SURESHRAINA, CHENNAI-SUPER-KINGS, IPL 2022, FAF DU PLESSIS, RCB, CAPTAIN, சுரேஷ் ரெய்னா, பாப் டு பிளஸ்ஸிஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்