'டுபிளஸ்சி'க்கு 'ரெய்னா' கொடுக்கப் போகும் 'ஸ்பெஷல்' ஃகிப்ட்... அவரே சொன்ன 'பதில்'... லைக்குகளை அள்ளிக் குவித்த அந்த ஒரு 'கமெண்ட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி ஆரம்பமாகவுள்ள நிலையில், முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன.

'டுபிளஸ்சி'க்கு 'ரெய்னா' கொடுக்கப் போகும் 'ஸ்பெஷல்' ஃகிப்ட்... அவரே சொன்ன 'பதில்'... லைக்குகளை அள்ளிக் குவித்த அந்த ஒரு 'கமெண்ட்'!!

ஐபிஎல் தொடர் நெருங்கி வருவதையடுத்து, சில அணிகள் தற்போதே பயிற்சிகளை ஆரம்பித்து விட்டது. அதிலும் குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, அம்பத்தி ராயுடு, கெய்க்வாட், சாய் கிஷோர், ஹரி நிஷாந்த் உள்ளிட்ட பல வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
suresh raina reveals special gift to faf du plessis ahead of ipl

கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்றிருந்த ஐபிஎல் தொடரில், சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த தொடரில், சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரின் பாதியிலேயே விலகியிருந்தார். இதனையடுத்து, இந்த ஆண்டு மீண்டும் அவர் சென்னை அணிக்காக ஆடவுள்ள நிலையில், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
suresh raina reveals special gift to faf du plessis ahead of ipl

மேலும், ஐபிஎல் தொடருக்கான பயிற்சியையும் அவர் ஆரம்பித்து விட்டார். இந்நிலையில், ஐபிஎல் தொடருக்கு தயாராக வேண்டி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெய்னா வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ ரசிகர்களிடையே அதிகம் வைரலாகி இருந்த நிலையில், சென்னை அணியின் வீரரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரருமான பாஃப் டுபிளஸ்ஸி, 'விரைவில் சந்திப்போம் பிரதர்' என கமெண்ட் செய்திருந்தார்.



 

இதற்கு பதில் தெரிவித்த ரெய்னா, 'நிச்சயமாக. நான் உங்களுக்காக ஒரு பேட் வாங்கிக் கொண்டு வருகிறேன்' என குறிப்பிட்டுள்ளார். பொதுவாக, சென்னை அணியில், சக வீரர்கள் என்ற உறவைத் தாண்டி, அனைவரும் குடும்பத்தைப் போல இணைந்து விளையாடி வருகின்றனர்.

அதனை மெய்ப்பிக்கும் வகையில், டுபிளஸ்ஸிக்கு பேட் ஒன்றை பரிசாக ரெய்னா கொடுக்கவுள்ளதை தெரிவித்துள்ளது, ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்