"இந்த 4 டீம் தான் 'பிளே ஆப்' போகும்.." அதிரடியாக கணித்த சுரேஷ் ரெய்னா.. லிஸ்ட்'ல சிஎஸ்கே இருக்கா இல்லையா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் போட்டி, கடந்த 26 ஆம் தேதி ஆரம்பமான நிலையில், இதுவரை ஆறு லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.

Advertising
>
Advertising

இந்திய வீரரை குறிப்பிட்டு.. அடல்ட் பட நடிகை போட்ட ட்வீட்.. ரவுண்டு கட்டிய ரசிகர்கள்

கடைசியாக, நேற்று இரவு நடந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின.

இதில், கடைசி ஓவரில் த்ரில்லிங் வெற்றியை பெங்களூர் அணி பெற்று, இந்த ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை அந்த அணி பதிவு செய்துள்ளது.

சென்னை Vs லக்னோ

இதற்கு அடுத்தபடியாக, இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளும், தங்களின் முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்தது. இதனால், 15 ஆவது ஐபிஎல் தொடரில் வெற்றி கணக்கைத் தொடங்க, இரு அணிகளும் இன்று தீவிரம் காட்டும் என தெரிகிறது.

இந்த தடவ Cup யாருக்கு?

அதே போல, அனைத்து ஐபிஎல் அணிகளும், மெகா ஏலத்தில் இருந்து வீரர்களைத் தேர்வு செய்து ஆடி வருவதால், பல அணிகளும் புத்தம் புது பொலிவுடன் விளங்குகிறது. இதனால், ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமே அணிகள் இதுவரை ஆடியுள்ளதால், எந்தெந்த அணிகள் இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி, கடைசியில் எந்த அணி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பும் தற்போதே ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது.

ரெய்னாவின் அசத்தல் கணிப்பு

இந்நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா, எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது பற்றி, கருத்து தெரிவித்துள்ளார். சுமார் 10 சீசன்களுக்கு மேல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த ரெய்னாவை, மெகா ஏலத்தில், சிஎஸ்கே உள்ளிட்ட எந்த அணிகளும் எடுக்க முன் வரவில்லை.

இதனால், அவர் 'Unsold' என அறிவிக்கப்பட்டிருந்தார். சிஎஸ்கே உள்ளிட்ட ஐபிஎல் அணிகளின் முடிவு, ரசிகர்கள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தி இருந்தது. அவரை ஐபிஎல் போட்டிகளில் காண முடியாது என்பதால் சோகத்திலும் அவர்கள் ஆழ்ந்திருந்தனர். இதனிடையே, ஐபிஎல் தொடரில் ஹிந்தி வர்ணனையாளராக சுரேஷ் ரெய்னா களமிறங்கி உள்ளார்.

சிஎஸ்கே இருக்கா இல்லையா?

ஐபிஎல் போட்டிகளில் ரெய்னாவை பார்க்க முடியவில்லை என்றாலும், ஐபிஎல் போட்டியில்  அவருடைய பங்கு ஏதேனும் ஒரு வழியில் இருப்பதால், ரசிகர்கள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகள் எது என ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.

தான் ஆடி வந்த சென்னை சூப்பர் கிங்ஸை குறிப்பிட்டுள்ள ரெய்னா, புதிய அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் பெயரை தெரிவித்துள்ளார். இது தவிர, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என குறிப்பிட்டுள்ளார்.

ரெய்னாவின் பிளே ஆப் கணிப்பு பற்றி ரசிகர்களும் தங்களின் கருத்தினை பதிவிட்டு வருகின்றனர்.

தினேஷ் கார்த்திக், மோர்கன் இருந்த டைம்'ல... அந்த பையன டீம்'ல சேக்காம வீட்லயே உக்கார வெச்சாங்க.. 'KKR'ஐ விளாசிய முகமது கைஃப்

CRICKET, IPL, SURESH RAINA, PLAYOFFS, IPL2022, CSK, LSG, CSL VS LSG, சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கே, ஐபிஎல், சென்னை VS லக்னோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்