'ஐ.பி.எல்' போட்டிகளில் இருந்து 'ரெய்னா' வெளியேறியது இதனால் தான்,,.. அவரே பதிவிட்ட 'ட்வீட்',,.. பரபரப்பை ஏற்படுத்திய 'பதிவு'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

 ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் உட்பட அணியின் நிர்வாகத்தை சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்தது.

இதனால் அணிக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில், ஐ.பி.எல் ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மறுநாளே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அணியின் நிர்வாகம் அறிவித்திருந்தது. மேலும், உடனடியாக அவர் இந்தியா திரும்புவதாகவும் அணியின் நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், சுரேஷ் ரெய்னாவின் மாமாவை ஒரு கும்பல் கொலை செய்ததாகவும், அவரது அத்தை மற்றும் சகோதரர் ஒருவர், படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியானது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்த, துபாயில் சென்னை அணி நிர்வாகம் சிறந்த முறையில் ஏற்பாடு எதுவும் செய்யவில்லை என்றும், அதனால் தான் ரெய்னா இந்தியா திரும்பப் போவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த சுரேஷ் ரெய்னா, தனது ட்விட்டர் பக்கத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், 'பஞ்சாப்பில் வைத்து எனது மாமாவின் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எனது மாமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிகிச்சை பெற்று வந்த எனது சகோதரர் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த இரவு என்ன நிகழ்ந்தது என தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், அது யார் என்பது குறித்து பஞ்சாப் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும். அது யாராக இருந்தாலும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான ட்வீட் தற்போது நெட்டிசன்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்