இந்த மனுஷன் உண்மையாவே ‘வேறலெவல்’ தாங்க.. ‘சின்ன தல’ செஞ்ச செயல்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின்போது சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா செய்த செயல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் சாஹா களமிறங்கினர். இதில் ஜோஸ் ஹசில்வுட் வீசிய 4-வது ஓவரில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஜேசன் ராய் வெளியேறினார். இதனை அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சனும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ப்ரியம் கார்க் 7 ரன்களில் வெளியேறினார். இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த அபிஷேக் ஷர்மா மற்றும் அப்துல் சமத் அதிரடி காட்டினர். இருவரும் தலா 18 ரன்கள் எடுத்திருந்தபோது ஜோஸ் ஹசல்வுட் ஓவரில் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனை அடுத்து களமிறங்கிய ரஷித் கான் 17 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்தது. இதில் அதிகபட்சமாக சாஹா 44 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில், இப்போட்டியின் இடையே ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன் அப்துல் சமத்தின் ஹெல்மெட் கழன்று விட்டது. உடனே வந்த சுரேஷ் ரெய்னா, ஹெல்மெட்டை சரியாக மாட்டிவிட்டு சென்றார். சுரேஷ் ரெய்னா பொதுவாக எதிரணி வீரர்களுடனும் நட்பாக பழகக்கூடியவர் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பந்தை காலால் தூக்கி வீசி ரெய்னா கேட்ச் பிடித்துவிட்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சிஎஸ்கே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்