"இன்னும் நம்பவே முடியல.." சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ.. ரெய்னாவை நினைத்து மனம் உருகிய ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் மெகா ஏலம் ஏற்கனவே முடிந்த நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளை எதிர்நோக்கி, அனைத்து அணிகளும் காத்து வருகிறது.
மார்ச் மாத இறுதியில், ஐபிஎல் போட்டிகள் நடைபெறலாம் என தகவல்கள் வலம் வரும் நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஒன்றும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, ஐபிஎல் மெகா ஏலத்தில், பல சுவாரஸ்ய மற்றும் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறியிருந்தது. இதற்கு மத்தியில், தாங்கள் திட்டம் போட்டு வைத்திருந்த வீரர்களை, கடும் போட்டிக்கு மத்தியில் ஐபிஎல் அணிகள் சொந்தமாக்கியது.
கடும் வேதனை
இன்னொரு பக்கம், எதிர்பார்த்த வீரர்கள் சிலர் ஏலத்தில் எந்த அணிகளும் தேர்வு செய்யாமல் போனது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த சுரேஷ் ரெய்னாவை எந்த அணிகளும் எடுக்க முன் வராமல் போனது, ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் கடும் வேதனையை உண்டு பண்ணியிருந்தது.
'சின்ன தல' ரெய்னா
சென்னை அணிக்காக சுமார் 10 சீசன்கள் மேல் ஆடியுள்ள சுரேஷ் ரெய்னா, பல போட்டிகளில் அந்த அணியின் வெற்றிக்காக பாடுபட்டுள்ளார். ஐபிஎல் போட்டியின் தலைச் சிறந்த வீரர் என்பதால், சுரேஷ் ரெய்னாவிற்கு Mr. IPL என்ற பெயரும் உண்டு. அப்படி ஒரு வீரரை சென்னை அணியும் எடுக்காமல் போனதால், சிஎஸ்கே அணி குறித்து ரசிகர்கள் பல விதமான கருத்துக்களையும் வெளியிட்டு வந்தனர்.
உருகும் ரசிகர்கள்
இதனைத் தொடர்ந்து, சிஎஸ்கே அணி தரப்பிலும், ரெய்னாவை அணியில் எடுக்காமல் போனது பற்றி, விளக்கமும் வெளியிடப்பட்டிருந்தது. இருந்த போதிலும், ரெய்னா இந்த சீசனில் ஐபிஎல் போட்டிகளை தவற விடவுள்ளதால், அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லாத ரசிகர்கள், அதிகம் நொந்து போயுள்ளனர். அதே போல, சிஎஸ்கே அணிக்காக பல போட்டிகளில் அதிரடி ஆட்டம் காட்டிய ரெய்னாவின் சிறப்பான தருணங்களையும், ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சுரேஷ் ரெய்னாவின் சில அழகான தருணங்களை இணைத்து, நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ரெய்னாவின் சிறப்பான இன்னிங்ஸ்கள், அணி வீரர்களுடன் ஜாலியாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை அடக்கிய இந்த வீடியோ, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் இந்த முறை களமிறங்கமாட்டார் என்பதால், இன்னும் வேதனையில் இருந்து மாறாமல் இருக்கும் ரசிகர்கள், சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவை பார்த்ததும், மேலும் உருகி போயுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "எனக்காக மும்பையும் (MI) சென்னையும் (CSK) சண்டை போட்டது தான் என் வாழ்க்கைல BEST MOMENT!" - இளம் வீரரின் வைரல் பேச்சு
- சிஎஸ்கே போட்ட பதிவு.. 'Smiley' மூலம் கமெண்ட் செய்த 'டு பிளஸ்ஸிஸ்'.. அடுத்த சில மணி நேரத்தில் நடந்த 'சம்பவம்'
- RCB டீம்ல இவ்ளோ பெரிய மிஸ்டேக் இருக்கே.. இதை யாராவது கவனச்சீங்களா.. தவறை சுட்டிக்கட்டிய ஆகாஷ் சோப்ரா..!
- சிஎஸ்கே தட்டித் தூக்கிய 'U 19' வீரர்.. இப்படி ஒரு மோசடி வேலை பாத்தாரா?.. வெளியான தகவலால் 'பரபரப்பு'
- "ரெய்னா sold to 'CSK'.." ஐபிஎல் ஏலத்தை Recreate செய்த ஹூக்.. "புண்படுத்திட்டே இருக்கீங்களே.." மனம் வருந்திய ரசிகர்கள்
- ‘இப்படி பண்ணா எப்படி மறுபடியும் டீம்ல எடுப்பாங்க’.. ரெய்னாவை சிஎஸ்கே ஏலத்துல எடுக்காததுக்கு இதுதான் காரணம்.. பரபரப்பை கிளப்பிய முன்னாள் வீரர்..!
- 2022 IPL: திருமண பிசியில் பிரபல வீரர்.. ஆர்சிபிக்கு எப்போதான் விளையாட வருவாரு.. கேப்டன் பொறுப்பு யாருக்கு?
- "தோனிக்காக கண்டிப்பா அத செய்வேன்.." ரெய்னா எடுத்த முடிவு.. "இதுக்கு எல்லாம் ஒரு மனசு வேணும்யா.." மீண்டும் வருந்திய ரசிகர்கள்
- IPL 2022: சாமியை மறந்த ரசிகர்கள்.. தோனியை சுற்றி வளைத்த கூட்டம்.. அன்பால் நெகிழ்ச்சியடைந்த தோனி!
- சிஎஸ்கே தான் அப்பாவோட ஃபேவரைட்.. இளம் வீரருக்கு சென்னை அணியில் கிடைத்த இடம்.. ஆனாலும் சூழ்ந்து கொண்ட துயரம்