"நான் இப்போ அங்க இருந்துருக்கணும்.." சிஎஸ்கே மேட்ச் முன்பு உருகிய ரெய்னா.. பாத்த ஃபேன்ஸ் பாவம்யா

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 15 ஆவது ஐபிஎல் தொடர், தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

இதன் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள், மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகின்றன.

சென்னை அணிக்கு புதிய கேப்டனாக ஜடேஜாவும், கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தோனியின் அரை சதம்

இதில், டாஸ் வென்ற ஷ்ரேயாஸ் ஐயர், பந்து வீச்சினைத் தேர்வு செய்தார். அதன்படி ஆடி வரும் சென்னை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில், சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக தோனி 50 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார்.

சோகத்தில் ரெய்னா ரசிகர்கள்

இந்நிலையில், சிஎஸ்கே ரசிகர்களை போட்டியின் போது, ஒரு விஷயம் கடும் வேதனையில் ஆழ்த்தி இருந்தது. 'Mr. IPL' என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் சுமார் பத்து சீசன்களுக்கு மேல் சென்னை அணிக்காக ஆடியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் நிறைய சாதனைகளை படைத்துள்ள ரெய்னாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனையடுத்து, இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில், ரெய்னாவை சிஎஸ்கே உள்ளிட்ட எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை.

ஐபிஎல் தொடரில் புது அவதாரம்

இதனால், அவர் 'Unsold' என அறிவிக்கப்பட்டிருந்தார். ரெய்னா ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற தகவல், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரின் வர்ணனையாளராக ரெய்னா களமிறங்கி உள்ளார். மைதானத்தில் ரெய்னாவை வீரராக பார்க்க முடியவில்லை என்றாலும், ஐபிஎல் தொடரில் அவரின் புது அவதாரத்திற்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில், ஹிந்தி மொழியில் வர்ணனை செய்யவுள்ள ரெய்னாவுக்கு, இன்று அசத்தல் வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.

மஞ்சள் நிற 'ஜெர்சி'

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற ரெய்னா, சிஎஸ்கே குறித்து பேசிய விஷயம், ரசிகர்களை மீண்டும் ஒருமுறை வருத்தம் அடையச் செய்துள்ளது. "நிகழ்ச்சியில் பங்கெடுக்க வேண்டி, மைதானத்தைக் கடந்து வந்த போது, நான் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்த படி, மைதானத்திற்குள் நுழைய வேண்டும் என ஆசைப்பட்டேன்" என ஏக்கத்துடன் தெரிவித்தார்.

மீண்டும் வேதனையில் ரசிகர்கள்

ஏற்கனவே, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்காமல் போன ரெய்னாவை நினைத்து இன்னும் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்கள், தற்போது அவர் சிஎஸ்கே ஜெர்சி அணிந்து மைதானத்திற்குள் நுழைய ஆசைப்பட்டதாக கூறியுள்ள விஷயம், ரசிகர்களை இன்னும் மனம் உருக வைத்துள்ளது.

முன்னதாக, சிஎஸ்கே அணி தன்னை ஏலத்தில் எடுக்காமல் போனாலும், தொடர்ந்து, சிஎஸ்கே அணியின் பதிவுகள் மற்றும் சிஎஸ்கே வீரர்கள் பதிவில் ரெய்னா கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

CHENNAI-SUPER-KINGS, SURESHRAINA, MSDHONI, CSK VS KKR, IPL 2022, எம்.எஸ். தோனி, சிஎஸ்கே, சுரேஷ் ரெய்னா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்