“தோனி அந்த முடிவை சொன்னதும் ரெய்னா அழுதுட்டாரு”.. பல வருசத்துக்கு முன்னாடி நடந்த உருக்கமான சம்பவம்.. இளம் வீரர் சொன்ன சீக்ரெட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்ததும் சுரேஷ் ரெய்னா கண்கலங்கியதாக அக்சர் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் தலைமையிலான இந்திய அணி ஒருநாள், டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன் டிராபி ஆகிய கோப்பையை வென்றுள்ளது. ஐசிசி நடத்தும் இந்த 3 கோப்பையையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தோனி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி சரிவில் இருந்து மீட்டு வரலாற்று வெற்றிகளை படைப்பது. தொடர்ந்து வெற்றிகல் பெற்று முதல் முறையாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இந்த சூழலில் கடந்த 2014-ம் ஆண்டு திடீரென டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அப்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தோனி ஓய்வு பெற்றபோது அவரின் நெருங்கிய நண்பராக கருதப்படும் சுரேஷ் ரெய்னா கண்கலங்கியதாக இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘மெல்போனில் நடந்த பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் தோனி அந்த முடிவை அறிவித்தார். அந்த தருணத்தில் மிகப்பெரிய அமைதி நிலவியது. அப்போது எல்லாரையும் அழைத்து ‘டெஸ்டில் இருந்து மஹி ஓய்வு பெறுகிறார்’ என கூறியபோது சுரேஷ் ரெய்னா அழுதுவிட்டார். அதேபோல் பலரும் கண்கலங்க ஆரம்பித்துவிட்டனர்.
அந்த சமயத்தில், என்ன நடக்கிறது? ஏன் எல்லோரும் கண் கலங்குகின்றனர்? என என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றேன். ஏனென்றால் நான் அப்போதுதான் முதல் முறையாக தோனியை பார்த்தேன். அப்போது அவர் என்னிடம் “அக்சர் நீ அணிக்குள் வந்து என்னை வெளியே செல்ல வைத்து விட்டாயா” என கூறியபோது எனது கண்கள் கலங்கிவிட்டன. நான் அணியில் நுழைந்த போதுதான் அவர் வெளியேறினார். அதன் பின், விளையாட்டாக அப்படி சொன்னேன் என கூறி என்னை அவர் கட்டி அணைத்துக்கொண்டார்’ என அக்சர் பட்டேல் உருக்கமாக கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் தோனியும், சுரேஷ் ரெய்னாவும் நெருங்கிய நண்பர்களாக பார்க்கப்படுகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய போட்டிகள் இருவரும் இணைந்து விளையாடியுள்ளனர். இந்த சூழலில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வை அறிவித்த சில நிமிடங்களில் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் ஐபிஎல் தொடரில் நீண்ட ஆண்டுகள் சிஎஸ்கே அணியில் தோனியுடன் இணைந்து விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தோனி சொன்ன அந்த அட்வைஸ்”.. RCB அணிக்கு எதிரா சிக்சர் மழை பொழிந்த CSK சிவம் துபே சொன்ன சீக்ரெட்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இது லிஸ்ட்லயே இல்லையே.. தீபக் சஹாருக்கு பதிலா இவரா..? நெட்டிசன்கள் சொன்ன அந்த வீரரின் பெயர்..!
- CSK vs RCB: இன்னைக்காவது அந்த ‘இளம்’ வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- SRH அணிக்கு வந்த புது சிக்கல்.. சில போட்டிகளை தவற விடும் ‘தமிழக’ வீரர்.. என்ன காரணம்..?
- "ஹர்திக் பாண்டியா மட்டும் இந்த மேட்ச்ல 50 அடிக்கட்டும்".. ஸ்டேடியத்தில் பெட் கட்டிய ரசிகர்.. அவசரப்பட்டுட்டியே குமாரு..!
- ‘இனி அவர் விளையாடுறது டவுட் தான்?’.. சோகத்தில் உள்ள CSK ரசிகர்களுக்கு இடியாய் வந்த புது தகவல்..!
- வேற டீமுக்கு போனாலும் பழச மறக்காத டு பிளசிஸ்.. சிஎஸ்கே வீரர்களை பார்த்ததும் செய்த செயல்..!
- ‘ஒரு சீனியர் ப்ளேயர் கிட்ட இப்படி நடந்துப்பீங்க’.. ஹர்திக் பாண்ட்யா செய்த செயல்.. விட்டு விளாசும் நெட்டிசன்கள்..!
- CSK vs RCB: 8 வருடத்துக்குப் பிறகு மிஸ் ஆகும் விஷயம்… ரசிகர்கள் சோகம்!
- IPL 2022 : "கைய குடுங்க கேமராமேன்".. IPL மேட்ச் பாக்க வந்த ரசிகைக்கு உருவான ஆர்மி.. ஊரு, பேரு, Insta ஐடி வரை புடிச்சுட்டாங்க போல?
- “எங்க வைரத்தை திருப்பி கொடுங்க”.. ஐபிஎல் மேட்சுக்கு நடுவே முன்னாள் இங்கிலாந்து வீரரிடம் கவாஸ்கர் கேட்ட கேள்வி.. ‘செம’ வைரல்..!