"நம்ம சப்போர்ட் 'சிஎஸ்கே'வுக்கு தான்.." மீண்டும் நிரூபித்த ரெய்னா.. எல்லா வதந்தியும் சுக்கு நூறு ஆயிடுச்சு..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளதால், அனைத்து அணிகளும் போட்டிகளுக்கு தயாராகும் நோக்கில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த முறை 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளதால், ஒரு குழுவில் ஐந்து அணி என இரு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், 15 ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ளதால், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சில நாட்களாக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில், அனுபவ வீரர்கள் மற்றும் சில முக்கிய இளம் வீரர்களையும் அணியில் இணைத்துக் கொண்டது சிஎஸ்கே.
ஐபிஎல் மெகா ஏலம்
ஆனால், ஐபிஎல் தொடரின் நட்சத்திர வீரரும், சென்னை அணிக்காக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல், ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டுள்ள சுரேஷ் ரெய்னாவையும், சிஎஸ்கே ஏலத்தில் எடுக்காமல் போனது, அதிகம் கேள்விகளை எழுப்பி இருந்தது. பல சீனியர் வீரர்களை அணியில் எடுத்த சிஎஸ்கே, ரெய்னாவை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை.
ரெய்னா ரசிகர்கள் வேதனை
அது மட்டுமில்லாமல், எந்த அணிகளும் ரெய்னாவை எடுக்காததால், அவர் 'Unsold' என அறிவிக்கப்பட்டார். ஐபிஎல் தொடரின் நம்பர் 1 வீரர் என்ற அந்தஸ்துள்ள ரெய்னா, இந்த முறை ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளவில்லை என்பது, அவரது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியிருந்தது.
ரெய்னா பெயர் டிரெண்ட்
சென்னை அணி ரெய்னாவை கைவிட்டது பற்றியும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். தொடர்நது, சென்னை அணியும் ரெய்னாவை எடுக்காமல் போனதற்கு விளக்கத்தை அளித்திருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் ரெய்னா பெயர் டிரெண்ட் ஆகிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
தீவிர பயிற்சியில் உத்தப்பா
சென்னை அணியில் இடம்பெற்றுள்ள ராபின் உத்தப்பா, பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவினை சிஎஸ்கே வெளியிட்டிருந்தது. இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உத்தப்பா பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வந்த நிலையில், ரெய்னாவும் "Best Wishes Brother" என கமெண்ட் செய்துள்ளார்.
கமெண்ட் போட்ட சின்ன 'தல'
இதற்கு உத்தப்பாவும் நன்றிகளை தெரிவித்துள்ளார். ரெய்னாவை சிஎஸ்கே அணி எடுக்காமல் போனதால், அவருக்கும், அணி நிர்வாகத்துக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம் என்ற வதந்தி இருந்தது. அதனை தன்னுடைய கமெண்ட்டால் சுக்கு நூறாக உடைத்துளார் ரெய்னா. முன்னதாக, சிஎஸ்கே வின் இன்ஸ்டாகிராம் பதிவிலும், கடந்த சில தினங்களுக்கு முன் ரெய்னா கமெண்ட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- IPL 2022: மனம் திறந்து கேட்ட கோலி… மீண்டும் ஆர் சி பி அணியில் இணையும் Mr 360!
- RCB-யின் அடுத்த கேப்டன் யாரு? - அணி நிர்வாகம் கொடுத்த அதிரடி அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்..!
- ”சூரத்தில் பிராக்டிஸ்".. அட்டகாசமான புது லுக்கில் தல தோனியின் வைரல் புகைப்படம்..
- சிஎஸ்கே இன்ஸ்டா பதிவில்.. சுரேஷ் ரெய்னா போட்ட கமெண்ட்.. "அவரு என்னைக்குமே சின்ன தல தான்யா.." நெகிழ்ந்து போன ரசிகர்கள்
- "எது ரெய்னா ஐபிஎல் ஆட போறாரா?.." ட்விட்டரில் ரவுண்டு கட்டிய 'ரசிகர்கள்'.. பின்னணி என்ன?
- IPL 2022 : பல கஷ்டம் தாண்டி சாதித்த இந்திய வீரருக்கு.. பஞ்சாப் கிங்ஸ் அணி கொடுத்த கேப்டன் பொறுப்பு..
- இந்த ட்விஸ்ட்டை கொஞ்சம் கூட எதிர்பார்க்கலயே.. சிஎஸ்கே தனி.. மும்பை தனி.. வெளியானது ஐபிஎல் அட்டவணை..!
- பிசிசிஐ எடுக்கப் போகும் முடிவு??.. "நல்லா இருக்கே உங்க கத.." மும்பை இந்தியன்ஸ்-க்கு எதிராக குரல் கொடுக்கும் ஐபிஎல் அணிகள்
- "'Retired' ஆன அன்னைக்கி தோனி சொன்ன விஷயம்.." 'சிஎஸ்கே' வீரர் வெற்றிக்கு பின்னால் இருக்கும் 'சீக்ரெட்'
- ஐபிஎல் ஏலத்தை நிறுத்துங்க.. பேரம் பேச வீரர்கள் என்ன கால்நடைகளா?" – சி.எஸ்.கே வீரர் கோரிக்கை