"தோனி இல்லன்னா.." சிஎஸ்கே பகிர்ந்த ஃபோட்டோ.. ரெய்னா செஞ்ச கமெண்ட்.. வைரலாகும் இன்ஸ்டா பதிவு

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள், ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டி இருந்தாலும், இதுவரை ஒரு அணி மட்டுமே பிளே ஆப் சுற்றை உறுதி செய்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | அடுத்த 4 மாசத்துக்கு Night தான்.. சூரியனயே பார்க்க முடியாது.. பூமியில இப்படி ஒரு இடமா?

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, நடப்பு சீசனில் தான் கால் பாதித்திருந்தது. வந்த வேகத்திலேயே மற்ற அணிகளை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தி, பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறி விட்டது.

இதுவரை 13 போட்டிகள் ஆடியுள்ள குஜராத், அதில் பத்து போட்டிகளில் வென்று முதலிடத்திலும் உள்ளது.

பிளே ஆப் சுற்றுக்கு போட்டி

அதே போல, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது. மீதமுள்ள 3 இடங்களுக்காக 7 அணிகள் போட்டி போட்டு வருகிறது. ஒவ்வொரு போட்டியின் முடிவுகளும் முக்கியம் என்பதால், 7 அணிகளுமே தாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் போராடி வருகிறது.

திணறிய சிஎஸ்கே

கடந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆரம்பத்தில் இருந்தே அதிக தடுமாற்றம் கண்டது. சில போட்டிகளில் மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே, பெரும்பாலான போட்டிகளில் திக்கித் திணறியது. சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ள நிலையில், 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது சிஎஸ்கே.

அடுத்த சீசன்'ல ஆடுவாரா?

கடைசி லீக் போட்டியில், மே 20 ஆம் தேதி அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்கவுள்ளது. இதனிடையே, சிஎஸ்கே கேப்டன் தோனி அடுத்த சீசனில் ஆடுவாரா என்ற கேள்வி, ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்து வருகிறது. இதுகுறித்து, ஐபிஎல் போட்டிக்கு மத்தியில் பேசி இருந்த தோனி, மஞ்சள் நிற ஜெர்சியில் ஏதாவது ஒரு வழியில் நான் அடுத்த ஐபிஎல் சீசனில் இருப்பேன் என மறைமுகமாக பதில் தெரிவித்திருந்தார்.

ரெய்னா போட்ட கமெண்ட்

அவரது ரசிகர்கள், நிச்சயம் தோனி அடுத்த சீசனில் ஆட வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சிஎஸ்கே அணி பகிர்ந்த பதிவுக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா செய்த கமெண்ட் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தோனியின் புகைப்படத்தை பகிர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ், "ஒவ்வொரு  முறையும் தோனி மைதானத்திற்கு நடந்து போகும் போது, பார்வையாளர்களின் கோஷம் வேற லெவலில் இருக்கும். அதனுடன் எதையும் ஒப்பிட முடியாது. மொத்த ரசிகர்களின் அன்பையும் தோனியே எடுத்துக் கொள்வார்" என குறிப்பிட்டிருந்தனர்.

தோனி இல்லன்னா..

இதன் கீழ், ரசிகர்கள் பலரும் பல விதமான கமெண்ட்டுகளை வெளிப்படுத்த, சுரேஷ் ரெய்னாவும் கமெண்ட் ஒன்றை செய்துள்ளார். அதில், "தோனி இல்லை என்றால் சிஎஸ்கே அணி எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்" என குறிப்பிட்டிருந்தார். தோனி குறித்த ரெய்னாவின் கருத்து, ரசிகர்கள் பலரையும் நெகிழ வைத்திருந்தது.

தோனி மற்றும் ரெய்னா என இரண்டு பேரும் இல்லாத சிஎஸ்கேவை நாங்கள் அனைவரும் மிஸ் செய்வோம் என்பது போன்ற பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

CRICKET, MS DHONI, SURESH RAINA, CSK, தோனி, சிஎஸ்கே, ஐபிஎல், சுரேஷ் ரெய்னா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்