"எல்லாருக்கும் ரொம்ப நன்றி".. சுரேஷ் ரெய்னா பகிர்ந்த லேட்டஸ்ட் ட்வீட்.. நொறுங்கி போன ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. கடந்த 2011 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை புரிந்திருந்தது.

Advertising
>
Advertising

இதில், இந்திய அணியில் இடம்பிடித்திருந்த சுரேஷ் ரெய்னா, பல போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அதே போல, ஐபிஎல் போட்டி ஆரம்பமானது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த சுரேஷ் ரெய்னா, பத்து சீசன்களுக்கு மேலாக அந்த அணிக்காக ஆடி உள்ளார்.

ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரராக ஜொலித்த சுரேஷ் ரெய்னாவுக்கு Mr. IPL என்ற பெயரும் உண்டு. அந்த அளவுக்கு ஏராளாமான போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ள ரெய்னா, கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி இருந்தார். இதனையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்திற்கு முன்பாக, சென்னை அணி ரெய்னாவை அணியில் இருந்து  விடுவித்திருந்தது.

இதன் பின்னர், ஏலத்திலும் ரெய்னாவை சிஎஸ்கே உள்ளிட்ட எந்த அணிகளும் எடுக்க தவறிய நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அவரால் பங்கேற்க முடியாமல் போனது. இதனால், அவரது ரசிகர்கள் கடும் ஏமாற்றமும், வேதனையும் அடைந்தனர். இதன் பின்னர், ஐபிஎல் தொடரின் வர்ணனையாளராகவும் செயல்பட்டிருந்தார் ரெய்னா.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக, ரெய்னா பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களும் அதிகம் வைரலாகி இருந்தது. இதனால், உள்ளூர் தொடர்களில் ரெய்னா களமிறங்க போவதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு வந்தனர். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், ரெய்னா தற்போது செய்துள்ள ட்வீட் ஒன்று, ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஏற்கனவே, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா, தற்போது அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ட்வீட் செய்துள்ளார்.

அவருடைய பதிவில், "இந்திய அணிக்காகவும், என்னுடைய மாநிலமான உத்தரபிரதேசத்திற்காகவும் ஆட வாய்ப்பு கிடைத்ததை பெரும் மரியாதையாக கருதுகிறேன். அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற உள்ளதை நான் அறிவிக்க விரும்புகிறேன்" என குறிப்பிட்டு, பிசிசிஐ, உத்தர பிரதேச கிரிக்கெட், சென்னை சூப்பர் கிங்ஸ், சுக்லா ராஜீவ் என அனைவரையும் டேக் செய்து நன்றி சொன்ன சுரேஷ் ரெய்னா, "என் திறமையில் அசைக்க முடியாத நம்பிக்கையும், தங்களின் ஆதரவையும் எனக்கு அளித்த ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஐபிஎல் தொடரிலோ அல்லது உள்ளூர் போட்டிகளிலோ ரெய்னா திரும்பி விளையாடுவார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள், கடும் ஏமாற்றத்தில் உறைந்து போயுள்ளனர்.

SURESHRAINA, CHENNAI-SUPER-KINGS, RETIREMENT, MR IPL, CSK, சுரேஷ் ரெய்னா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்