‘ஒன்னில்ல ரெண்டில்ல மொத்தம் 4 விக்கெட்’.. ஒத்த ஆளாய் RCB-ஐ மிரள வைத்த KKR வீரர்.. நொந்துபோன கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.

ஐபிஎல் (IPL) தொடரின் எலிமினேட்டர் சுற்று இன்று (11.10.2021) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் விராட் கோலி (Virat Kohli)  தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், இயான் மோர்கன் (Eoin Morgan) தலைமையிலான இயான் மோர்கன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். இந்த கூட்டணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இதில் லோக்கி பெர்குசன் 6-வது ஓவரில் தேவ்தத் படிக்கல் (21 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார்.

இதனை அடுத்து களமிறங்கிய கே.எஸ்.பரத் (9 ரன்கள்), சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் (Sunil Narine) ஓவரில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி (39 ரன்கள்), ஏபி டிவில்லர்ஸ் (11 ரன்கள்), மேக்ஸ்வெல் (15 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து சுனில் நரேன் ஓவரில் அவுட்டாகி வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களை பெங்களூரு அணி எடுத்துள்ளது.

இப்போட்டியில் தோல்வி பெறும் அணி, தொடரில் இருந்து வெளியேறும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்