"என்னங்க இது??... ஏற்கனவே அங்க ஒரே 'Confusion'... இதுல நீங்க வேறயா??..." முன்னாள் 'வீரரின்' கருத்தால் 'இந்திய' அணியில் எழுந்த 'பரபரப்பு'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி மாதம் ஏழாம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ளது.

இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருந்தாலும் அடுத்த போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, ரோஹித் ஷர்மா குவாரன்டைன் முடித்து மூன்றாவது அணியுடன் இணையவுள்ளார்.

அதே போல, இதுவரை இரண்டு போட்டிகளிலும் களமிறங்காத கே.எல் ராகுல் அடுத்த போட்டியில் களமிறங்குவாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. ரோஹித், ராகுல் ஆகியோர் அடுத்த போட்டியில் களமிறங்கினால் இரண்டு போட்டிகளிலும் இதுவரை சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தாத மயங்க் அகர்வால் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோரை வெளியே உட்கார வைக்கலாம் என்றும் சிலர் கணித்து கூறி வருகின்றனர்.

அடுத்த போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனுக்கான குழப்பம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அடுத்த போட்டிக்கான இந்திய அணி குறித்து தெரிவித்துள்ள கருத்து ஒன்று சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றும், இரண்டு போட்டிகளில் அகர்வால் சரியாக ஆடாததை வைத்து அவரை மொத்தமாக மதிப்பிட கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ப்ரித்வி ஷா, இரண்டு இன்னிங்ஸ்களில் முறையே 0,4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக மற்றொரு இளம் வீரர் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்கினார்.

தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அபாயகரமான ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் வரிசையை மிகவும் திறம்பட அவர் எதிர்கொண்டிருந்தார். ஆனால், அவரை அடுத்த போட்டியில் மிடில் ஆர்டரில் ஆட வேண்டுமென கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். தொடக்க வீரராக களமிறங்கி அசத்திய வீரரை தனது இரண்டாவது போட்டியிலேயே வரிசை மாற்றி ஆட வைப்பது என்பது நிச்சயம் சற்று குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

அதே போல, ராகுல் அணியில் இணைவது குறித்தும் கவாஸ்கர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால், ஏற்கனவே உள்ள கேள்விகளில் கவாஸ்கரின் கருத்து மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்