இவரு ஏன் இப்படி பண்ணிட்டு இருக்காரு?.. அப்செட் ஆன சுனில் கவாஸ்கர்.. நெருக்கடியில் கோலி?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென்னாப்பிரிக்கா : இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, தொடர்ந்து விமர்சனத்தை சந்தித்து வருவதால், கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக, டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

இதன் முதல் போட்டி, கடந்த 26 ஆம் தேதி ஆரம்பமானது. டாஸ் வென்ற கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில், 327 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக, தொடக்க வீரர் கே எல் ராகுல் 123 ரன்கள் எடுத்திருந்தார்.

யாருக்கு வெற்றி?

தொடர்ந்து, பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 197 ரன்களில் ஆல் அவுட்டானது. பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி, கடுமையாக திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுக்க, 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர், 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வரும் தென்னாப்பிரிக்க அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.

விராட் கோலி மீது விமர்சனம்

இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இன்னும் 211 ரன்கள் தேவை. இந்திய அணியின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்ற நிலையில், எந்த அணி கடைசி நாளில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, இந்திய கேப்டன் விராட் கோலி கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.

ஒரே தவறு

இதற்கு காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, சர்வதேச போட்டியில்  ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது தான். தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் கூட, 35 & 18 ரன்கள் மட்டும் எடுத்துள்ளார். சதம் அடிக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, இந்த இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒரே போல தான் அவுட்டாகி நடையைக் காட்டினார். அதாவது, ஆப் ஸ்டம்பிற்கு வெளியே வரும் பந்தினை தேவையே இல்லாமல், ஆட நினைத்து கேட்ச் அவுட்டானார். இந்த போட்டியில் மட்டுமில்லாது, கடந்த காலத்திலும் இதே தவறின் மூலம் தான் அவர் பல போட்டிகளில் அவுட்டாகி வந்தார்.

சுனில் கவாஸ்கர் விமர்சனம்

தற்போதைய கிரிக்கெட் அரங்கில், சிறந்த பேட்ஸ்மேனான கோலி, ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்து வருவது, ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், கோலி ஆட்டமிழந்த போது, வர்ணனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய அவர், 'மதிய உணவு இடைவேளைக்கு பிறகான முதல் பந்தில், கோலி அவுட்டாகி செல்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில், எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும், எதாவது ஒரு இடைவெளி கிடைத்து ஆடும் போது, சிறிது நேரம் எடுத்துக் கொண்ட பிறகு தான், அடிக்க ஆரம்பிப்பார்.

கோலி போட்ட திட்டம்?

ஆனால், அனுபவ பேட்ஸ்மேனான விராட் கோலி, ஆப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்தினை, தேவையில்லாமல் சென்று அடிக்கிறார். முதல் இன்னிங்ஸில் அவர் அவுட்டானது போலவே, மீண்டும் ஆட்டமிழக்கிறார். ஒரு வேளை, வேகமாக ரன்களைக் குவித்து, டிக்ளேர் செய்யலாம் என திட்டமிட்டு இருப்பார் போல. ஆனாலும், இந்திய கிரிக்கெட் வரலாற்றில், டிக்ளேர் செய்யலாம் என எதிர்பார்க்கும் போது, அவர்கள் ஆல் அவுட்டாகி தான் செல்வார்கள்' என தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இனிமேல், டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கேப்டனாக செயல்படவுள்ளார் விராட் கோலி. இதனால், ஒரு நாள் போட்டி  மற்றும் டி 20 என இரண்டிலும், தனது பேட்டிங் மீது மட்டுமே கவனம் செலுத்துவார். அதன் மூலம், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தன் மீதான விமர்சனத்திற்கு நிச்சயம் பதில் சொல்வார் என அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

VIRATKOHLI, சுனில் கவாஸ்கர், விராட் கோலி, பேட்டிங் விமர்சனம், SUNIL GAVASKAR, VIRAT KOHLI, IND VS SA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்