'இந்த இடைவெளில ஒரு டிரக்கே போகலாம்’... ‘இரண்டு இளம் வீரர்களையும்’... 'கோபத்தில் சாடிய முன்னாள் கேப்டன்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய இந்திய அணியின் துவக்க வீரர்களை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் இன்று காலை முதல் டெஸ்ட் போட்டி துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில், இளம் வீரரான ப்ரித்வி ஷா போட்டியின் இரண்டாவது பந்திலேயே ஸ்டார்க் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
மற்றொரு துவக்க வீரரான மயங்க் அகர்வால் சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 40 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்திருந்த போது, பேட் கம்மின்ஸ் வீசிய துல்லியமான பந்துவீச்சில் அவுட் ஆகி அவரும் வெளியேறினார். சிறப்பான துவக்கத்தை அளிக்க வேண்டிய துவக்க வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானதால், முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தங்களின் பேட் (BAT) மற்றும் பேடிற்கு (PAD) இடையில் அதிகமான இடைவெளியை ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் விட்டதாலேயே அவர்களால் நிலைத்து ஆட முடியாமல் போனதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பேட்டிற்கும் பேடிற்கும் இடையிலான இடைவெளி சரியாக இருந்தால்தான் சிறப்பாக விளையாட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மயங்க் அகர்வாலின் பேடிற்கும், பேட்டிற்கும் இடையிலான தூரத்தில் ஒரு டிரக் கூட சென்றிருக்க முடியும் என்றும் சுனில் கவாஸ்கர் கடுமையாக தெரிவித்துள்ளார். இதுவே மயங்க் மற்றும் ப்ரித்வி ஷா செய்த மிகப்பெரிய தவறு என்றும் சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ப்ரித்வி ஷா' அவுட்டாகும் முன்... 'ரிக்கி பாண்டிங்' சொன்ன அந்த விஷயம்... "உண்மையாவே நீங்க 'legend' தான்..." வைரலாகும் 'வீடியோ'!!!
- ‘யார் சொல்லியும் கேட்காமல் நம்பி எடுத்த கேப்டன் கோலி’... 'சொல்லி வச்ச மாதிரியே'... 'திரும்பவும் அதே தவறை செய்த இளம் வீரர்’... ‘ட்ரோல் செய்யும் ரசிகர்கள்’...!!!
- 'ஐபிஎல் கோப்பையை ஜெயிச்சே ஆகணும்’... ‘பழைய பயிற்சியாளரையே நியமித்து’... ‘இப்பவே அதிரடி மாற்றத்திற்கு தயார் ஆன ஐபிஎல் அணி’...!!!
- ‘இது கொஞ்சம் கூட நல்லா இல்ல’... ‘அந்த 2 பேரும் ரன்களே எடுக்க மாட்டாங்க’... 'வெளுத்து வாங்கும் ரசிகர்கள்’...!!!
- ‘இப்ப வரைக்கும் அவர் தான் எங்க கேப்டன்’... ‘அந்த சீனியர் வீரர் இல்லாமல் மிஸ் பண்றோம்’... ‘வெளிப்படையாக பேசிய துணை கேப்டன்’...!!!
- ‘ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்’... ‘அதிரடியாக இடம் பிடித்த இந்திய வீரர்கள்’... ‘ஆனாலும் 3-வது இடத்துக்கு இறங்கிய இந்திய அணி’...!!!
- ‘சர்ச்சைக்கு எல்லாம் முற்றுப்புள்ளி’... ‘ஒருவழியாக ஃபிளைட் பிடித்த அதிரடி வீரர்’... ‘வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்’...!!!
- 'காயம் காரணமாக’... ‘பாதி போட்டியில் வெளியேறிய இந்திய ஆல்ரவுண்டர்’.... ‘தீவிர பயிற்சியால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு’...!!!
- ஓப்பனிங் பேட்ஸ்மேனா 'அவர' தான் இறக்கணும்...! 'அவரு விளையாடுறது என்ன ரொம்ப அட்ராக்ட் பண்ணுது...' - சுனில் கவாஸ்கர் கருத்து...!
- ‘கோலி இல்லனா என்ன?’... ‘கேப்டனா அவர் இருந்தப்போ ஜெயிச்சுருக்காரு’... ‘அதனால அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில்’... ‘அவருக்கு நெருக்கடி வராது’... ‘கவாஸ்கர் குறிப்பிட்ட சீனியர் வீரர்’...!!!