ஓப்பனிங் பேட்ஸ்மேனா 'அவர' தான் இறக்கணும்...! 'அவரு விளையாடுறது என்ன ரொம்ப அட்ராக்ட் பண்ணுது...' - சுனில் கவாஸ்கர் கருத்து...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதக்காலமாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளையும் டெஸ்ட் போட்டியையும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் மயங்க் அகர்வால் உடன் தொடக்க வீரராக பிருத்வி ஷா களமிறங்குவாரா அல்லது சுப்மன் கில் களமிறங்குவாரா என கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறும் போது, 'மயங்க் அகர்வால் உடன் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதுதான் சரியாக இருக்கும். பயிற்சிப் போட்டியில் சுப்மன் கில் சிறப்பாக விளையாடினார். நல்ல பார்மில் இருக்கிறார். அவரின் ஆட்டத்தை நேரில் பார்த்த ஆலன் பார்டன் சுப்மன் கில் ஆட்டத்தை பார்த்தார். அவரின் ஆட்டம் மிகவும் கவர்ந்துவிட்டதாக கூறினார். நானும் அதைதான் சொல்கிறேன். முதல் டெஸ்ட்டில் சுப்மன் கில் தொடக்க வீரராக விளையாட வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

மேலும் ஆலன் பார்டர் இதுகுறித்த கேள்விக்கு பதிலாளிக்கையில் 'சுப்மன் கில் ஆட்டத்தை சிட்னியில் பார்த்தேன். அவரின் ஆட்ட நுணுக்கங்கள் சிறப்பாக இருக்கிறது. அவர் மிகவும் இளம் வீரர். அதிரடியாக விளையாடலாம். ஆனால் அவர் பொறுப்புணர்வுடன் விளையாடுகிறார். அது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. நான் இந்திய தேர்வுக்குழுவில் இருந்தால் பிருத்வி ஷாவுக்கு பதிலாக சுப்மன் கில்லை ஆடும் அணியில் சேர்ப்பேன்' எனவும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்