'அந்த ஒரு வரி... அதிகாரத்தில் இருக்கும் சிலருக்குப் பிடிக்காமல் போயிருக்கும்'- வருத்தப்படும் கவாஸ்கர்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகோலி கேப்டன்ஸி சர்ச்சை: ‘மொத்த பிரச்சனைக்கும் அந்த ஒற்றை வரிதான் காரணம்!’- போட்டுத்தாக்கும் கவாஸ்கர்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ- க்கும் விராட் கோலிக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, விராட் கோலி ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ரோகித் சர்மா, கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து சர்ச்சைகளை மட்டுப்படுத்தும் நோக்கில் பிசிசிஐ- யின் தலைவர் சவுரவ் கங்குலி, ‘கோலியிடம் டி20 கேப்டன்ஸியை விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று தனிப்பட்ட முறையில் நான் கேட்டுக் கொண்டேன்.
ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்குத் தனித் தனியே கேப்டன்கள் இருக்க வேண்டாம் என்று கருதினோம். அதனால் தான் ரோகித் அந்த இரண்டு ஃபார்மட்டுகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கோலி, டெஸ்ட் கேப்டனாக மட்டும் செயல்படுவார் என்று முடிவெடுக்கப்பட்டது’ என்று கூறினார்.
இதை மறுக்கும் வகையில் கோலி, ‘என்னிடம் யாரும் கேப்டன்ஸி குறித்துப் பேசவில்லை. ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து நான் நீக்கப்பட இருப்பதாக, அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு ஒன்றரை மணி நேரம் முன்னால் தான் எனக்குத் தெரியப்படுத்தினார்கள்’ என்று கங்குலி சொல்லிய கருத்துக்கு நேர் மாறான கருத்தை தெரிவித்தார்.
இப்படி இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஒருவரும், பிசிசிஐ- யின் தலைவருமே ஒற்றைக் கருத்தைக் கூறாதது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதையடுத்து கங்குலி தரப்பு, ‘கோலி கூறியது பற்றி கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்று முடித்துக் கொண்டது. இது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியது.
இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவானான இந்தியாவின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ‘கோலி, டி20 கேப்டன்ஸி பொறுப்பில் இருந்து தான் விளகுவதாக கூறி வெளியிட்ட செய்திக் குறிப்பைப் படித்தேன். அவர் அதில் தன் கருத்தை வெளிப்படுத்திய விதம், அதிகாரத்தில் இருந்த சிலருக்குப் பிடித்திருக்காது என நினைக்கிறேன்.
அந்த செய்திக் குறிப்பில் கோலி, ‘இனி வரும் காலங்களில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து இந்திய அணியை வழி நடத்துவேன்’ என்று கூறியிருந்தார். அதை அவர், ‘நான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை வழி நடத்த தயாராகவே இருப்பேன்’ என்று தெரிவித்திருக்கலாம்.
கோலி, தானே எப்படியும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக இருப்பேன் என்று நினைத்துக் கொண்டு அறிக்கை வெளியிட்டது, அவருக்கு எதிராக செயல்பட காரணமாக அமைந்திருக்கலாம். அவர் என்ன தான் ஐசிசி தொடர்களில் கோப்பைகளை வென்று குவிக்கவில்லை என்றாலும், அவர் மிகச் சிறந்த கேப்டனாக செயல்பட்டு வெற்றிகளை குவித்துள்ளார்.
எனவே அவர் மீது யாருக்கும் அதிருப்தி இருந்திருக்காது. அவரின் தலைமைப் பண்பு குறித்தும் யாரும் சந்தேகப்பட்டிருக்க் மாட்டார்கள். ஆனால், அவர் அறிக்கையின் அந்த ஒரு வரி மொத்த கதையையும் மாற்றி விட்டதாக கருதுகிறேன்’ என்று சர்ச்சைகளுக்கு என்ன காரணமாக இருக்கும் என்பது குறித்து தன் பார்வையை தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘என்ன நினைச்சிட்டு இருக்கீங்க, ஒரு வரமுறை வேண்டாம்... கோலியோட உரிம அது..!’- குரல் கொடுக்கும் இந்திய வீரர்
- "தென் ஆப்ரிக்கா தொடரில் அதை செஞ்சே ஆகணும்..!"- 'ஒரு கை பார்த்துவிட' கேப்டன் கோலி முடிவு!
- 'நட்புன்னா என்ன தெரியுமா? நண்பன்னா யார் தெரியுமா?'- விராட் ப்ரஸ் மீட்-க்குப் பின் வைரலாகும் ஜடேஜாவின் ட்வீட்!
- எல்லாமே பொய்... அவர்கள்தான் விளக்க வேண்டும்... ஓப்பனாக உடைத்த கோலி!
- '4 வருஷத்துக்கு அப்றம் வந்திருக்காரு... அவ்ளோ சீக்கிரம் நீங்க ஒதுக்கிட முடியுமா?'- கங்குலியை திகைக்க வைத்த 'அந்த' பவுலர் யார்?
- 'யம்மாடியோவ்..! என்னா அடி..!'- கோலிக்கு நிகரான சாதனையை அசால்ட்டாகப் பதிவு செய்த ருதுராஜ்!
- 'என்னடா நடக்குது அங்க..?' கேப்டன் ஆகக் களமிறங்கும் ரோகித்… திடீர் லீவு போடும் கோலி..!
- ரஜினியோட அறிக்கையை கவனிச்சீங்களா.. வெங்கடேஷ் ஐயர் செம்ம ஹேப்பி!
- ‘பரவாயில்லப்பா பிசிசிஐ இந்த ஒரு நல்ல காரியத்த தொடங்கியிருக்காங்களே..!’- குவியும் பாராட்டுகள்..!
- ‘திடீர்ன்னு இவருக்கு இப்டி ஆய்டுச்சே..!’- தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து விலக்கப்பட்ட ரோகித் சர்மா..!