கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்கங்க பண்ட் – ரிஷப் பண்டை விளாசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இரண்டாவது இன்னிங்சில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் டக்கில் அவுட்டாக “கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்கங்க” என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் சாடியுள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட்

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்ப்பிரிக்காவை எளிதாக வீழ்த்தியது.
இதனையடுத்து ஜோகன்ஸ்பர்க்கில் நேற்று துவங்கிய போட்டியில் சீரிஸை வெல்லும் நோக்கோடு சீரியசாக களத்தில் இறங்கியது தென்னாபிரிக்கா. இந்தப் போட்டியிலும் டாசை வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பத்திலிருந்தே இந்திய வீரர்கள் சறுக்கியதால் 202 ரன்களை மட்டுமே இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் எடுத்தது.

தாக்குப்பிடித்த தென்னாப்பிரிக்கா

அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த தென்னாபிரிக்க வீரர்கள் இந்திய அணியின் அசுரத்தனமான பந்துவீச்சை நேர்த்தியாக ஆடத் தொடங்கினர்.  ஒருபக்கம் விக்கெட் விழுந்தாலும் ஸ்கோர் நிலையாக ஏறத்தொடங்கியது. இறுதியில் 229 ரன்னுக்கு தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியாவின் தாக்கூர் சிறப்பாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


தென்னாப்பிரிக்கா இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் இந்திய வீரர்கள் தங்களது இரண்டாவது இன்னிங்சை துவங்கினர்.

ரஹானே – புஜாராவின் அசத்தல் ஆட்டம்

இந்தியாவின் துவக்க வீரர்களான ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஜோடி சோபிக்கவில்லை என்றாலும் அடுத்துவந்த ரஹானே – புஜாரா கூட்டணி சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. தென்னாப்பிரிக்க வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடித்து ஆடிய இந்தக் கூட்டணியை முடித்துவைத்தார் ககிசோ ராபாடா.

ரஹானே 58 ரன்களுடனும் புஜாரா 53 ரன்களுடனும் வெளியேற இந்தியாவின் ஸ்கோர் 165/5 ஆக இருந்தது. தென்னாபிரிக்காவை விட 140 ரன்கள் மட்டுமே இந்தியா முன்னிலை பெற்றிருந்த நிலையில் இந்தியாவின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் உள்ளே வந்தார்.

ஏமாற்றிய பண்ட்

நிலைத்து விளையாடி இந்தியாவை 250 க்கும் அதிகமான ரன்கள் முன்னிலைக்கு எடுத்துச் செல்வார் என ரசிகர்கள் நம்பிய வேளையில் ரன் ஏதும் எடுக்காமல் டக்கில் வெளியேறினார் பண்ட். ராபாடா போட்ட ஷார்ட் டெலிவரியை தேவையில்லாமல் அடிக்கப் போய் வெரேய்னிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் ரிஷப் பண்ட்

கொந்தளித்த கவாஸ்கர்

அப்போது வர்ணனை செய்துகொண்டிருந்த சுனில் கவாஸ்கர்,” இந்த ஷாட்டிற்கு எந்த மன்னிப்பும் கிடையாது. கொஞ்சம் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். ரஹானே, புஜாரா ஆகியோர் கஷ்டமான நிலையிலும் உடலில் பந்துகளை எதிர்கொண்டு தாக்குப்பிடித்து ஆடினர். அதுபோல ஆடியிருக்க வேண்டும். சக வீரர்கள் கூட இதனை ஏற்றுகொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

RISHAPPANT, ரிஷப்பன்ட், INDIA, CRICKET, இந்தியா, கிரிக்கெட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்