"நல்லா இருக்கே உங்க கதை??.. ஒவ்வொரு ஆளுங்களுக்கும் ஒவ்வொரு நியாயமா??.." 'சரமாரி' கேள்விகளை எழுப்பிய 'சுனில் கவாஸ்கர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்றின் காரணமாக, இந்தியாவில் நடைபெற்றுவந்த 14வது ஐபிஎல் சீசன், தற்போது பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட பாதி லீக் போட்டிகள் வரை இந்த சீசனில் நடந்து முடிந்துள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள ஹைதராபாத் அணி, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த பல சீசன்களில், தொடர்ந்து பலம் வாய்ந்த அணியாக வலம் வந்த ஹைதராபாத் அணி, இந்த முறை படு சொதப்பலாக ஆடியிருந்தது.
மேலும், இந்த சீசனில் 6 போட்டிகள் முடிவடைந்த சமயத்தில், அணியின் மோசமான செயல்பாட்டின் காரணமாக, ஹைதராபாத் கேப்டன் வார்னரை அந்த அணி நிர்வாகம் நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக வில்லியம்சனை நியமித்திருந்தது. இருந்தபோதும் அந்த அணி கடைசி லீக் போட்டியில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில், வார்னரை ஆடும் லெவனில் கூட ஹைதராபாத் அணி களமிறக்கவில்லை.
ஐபிஎல் தொடரில் ஒரு தொடரின் பாதிக்கு நடுவே, கேப்டனை மாற்றுவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பாக, பல சீசன்களில் அப்படி நடந்துள்ளது. ஆனால், ஹைதராபாத் அணி தொடர்ந்து பல சீசன்களில், பிளே ஆஃப் முன்னேறுவதற்கும், ஒருமுறை கோப்பையை கைப்பற்றுவதற்கு காரணமாக இருந்த வார்னரை, ஒரு தொடரின் பாதியில் அதன் முடிவை வைத்து, அந்த அணி நிர்வாகம் நீக்கியுள்ளது, கடும் பரபரப்பை கிளப்பியிருந்தது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar), இது பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'ஹைதராபாத் அணி முன்னாள் கேப்டன் பதவியில் இருந்து வார்னரை தூக்கியது மட்டுமில்லாமல், ஆடும் லெவனில் இருந்தும் நீக்கியது. வார்னர் தற்போது ரன்களை அடித்து வந்தாலும் தனது முந்தைய காலங்களைப் போல் அதிரடியாக ஆடி ரன் குவிக்கவில்லை. ஆனால், அவர் குவிக்கும் ரன்கள் அணிக்கு தேவையாக அமைந்தது.
அப்படி இருந்தபோதும், அவரைப் போட்டியில் இருந்தும் வெளியேற்றியுள்ளது விசித்திரமாக உள்ளது. அவரை கேப்டன் பதவியிலுள்ள சரி மற்றும் தவறுகள் பற்றி, நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்தாலும் இப்போது
தோன்றும் கேள்வி என்னவென்றால், ஒரு கேப்டனை தொடரின் பாதியில் இருந்து நீக்குவது போல ஏன் ஒரு போட்டிக்கு நடுவே ஒரு அணியின் பயிற்சியாளர்களையும் அப்படி மாற்றக்கூடாது?.
கால்பந்து போட்டிகளில் ஒரு அணி தடுமாறும் போது, அந்த அணியின் மேலாளர் வரை வெளியேற்றப்படுவார்கள். ஆனால், கிரிக்கெட் போட்டிகளில் அப்படி நடைபெறுவதில்லை' என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
சீமானுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!.. மீளாத்துயரில் நாம் தமிழர் கட்சி!.. நொறுங்கிப் போன தம்பிகள்!
தொடர்புடைய செய்திகள்
- ‘அதிகாலை பயங்கர சத்தம் கேட்டது’!.. மாலத்தீவு கடற்பகுதியில் விழுந்த சீன ‘ராக்கெட்’ குறித்து பகிர்ந்த வார்னர்..!
- "எல்லாத்துக்கும் அவரு ஒருத்தரு தான் 'காரணம்'.. சும்மாவா அவர 'டீம்'ல இருந்து தூக்குனாங்க??.. வார்னரை கடுமையாக விமர்சித்த 'முன்னாள்' வீரர்!!
- மாலத்தீவு மதுபாரில் முன்னாள் வீரருடன் சண்டையா..? திடீரென பரபரப்பை கிளப்பிய செய்தி.. சர்ச்சைக்கு வார்னர் கொடுத்த பதில்..!
- "அவரு பேசுன பேச்சுக்கு தான் கேப்டன் 'பதவி'ய பறிச்சுட்டாங்க.." 'வார்னர்' பற்றி 'முன்னாள்' வீரர் சொன்ன 'விஷயம்'... பரபரப்பை ஏற்படுத்திய 'கருத்து'!!
- "சீக்கிரமா குணமடைஞ்சு வாங்கப்பா.." பிரபல 'இந்திய' வீரரின் 'மகள்' வரைந்த 'ஓவியம்'.. உருகிப் போன 'நெட்டிசன்கள்'!!
- ‘எப்படி இது நடந்தது..?’ RRvSRH போட்டியின் போது நடந்த அதிர்ச்சி.. இரண்டு பேரை கைது செய்த போலீசார்..!
- VIDEO: ‘எப்படி இருந்த மனுசன்’!.. ‘கடைசியில அவரை இப்படி பார்க்க வச்சிட்டீங்களே’.. உடைந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் ‘வார்னர்’ வீடியோ..!
- "'கேப்டன்' பதவியும் போயிடுச்சு.. 'டீம்'லயும் வாய்ப்பு குடுக்கல.. அடுத்து என்ன தான் பண்ண போறீங்க??.." 'வார்னர்' இடம் குறித்து 'வில்லியம்சன்' சொன்ன 'பதில்'!!
- 'போச்சு!.. வார்னரைப் போலவே கேப்டன் பதவியை... இழக்கப் போகும் மற்றொரு வீரர்'!?.. தீவிர கண்காணிப்பு!.. பதவிய காப்பத்திக்க வழி இருக்கா?
- 'எத்தனையோ பேட்ஸ்மேன பார்த்தாச்சு...' ஆனா 'யார்கிட்டையும்' இல்லாத ஒண்ணு 'இவருகிட்ட' இருக்கு...! - டெல்லி அணி வீரரை புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்...!