"ராகுல் ஏன் எப்படி பண்ணாரு.. எனக்கு ஒண்ணுமே புரியல.." விரக்தியில் சுனில் கவாஸ்கர்.. காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் தான் தற்போது புள்ளிப் பட்டியலில் டாப்பில் உள்ளது.

Advertising
>
Advertising

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, இதுவரை ஆறு போட்டிகளில் ஆடி அதில் ஐந்தில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறது.

இதனைத் தொடர்ந்து, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று, இரண்டாம் இடத்தில் உள்ளது (இன்றைய போட்டியில் (18.04.2022) அணி வெற்றி பெறுவதை வைத்து பட்டியல் மாறலாம்).

இரு அணிகளும் அதிக பலத்துடன் காணப்படும் நிலையில், எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக அவை விளங்கிக் கொண்டிருகிறது. கடந்த சில சீசன்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்கி வந்த ராகுலின் கேப்டன்சி செயல்பாடு, பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்திருந்தது.

ராகுலின் அதிரடி சதம்

தொடர்ந்து, அவரை பஞ்சாப் அணி விடுவிக்க, புதிதாக உருவான லக்னோ அணி, ஏலத்திற்கு முன்பாக கே எல் ராகுலை 17 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி, அவரை கேப்டனாகவும் நியமித்திருந்தது. அணியையும் இந்த முறை சிறப்பாக வழிநடத்தி வரும் ராகுல், பேட்டிங்கிலும் நன்றாக செயல்பட்டு வருகிறார்.

இதுவரை ஆடியுள்ள 6 போட்டிகளில், ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதத்துடன் மொத்தம் 235 ரன்கள் எடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிட்டியில், ஆரம்பத்தில் இருந்தே அதிரடியுடன் ஆடி, சதமடித்து அசத்தி இருந்த அவரின் இன்னிங்ஸிற்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்திருந்தது.

கேள்விக்குள்ளான கொண்டாட்டம்..

இந்நிலையில், சதமடித்த பிறகு, ராகுல் அதனை கொண்டாடிய விதம் பற்றி சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ராகுல் சதமடித்த பிறகு, தன்னுடைய இரண்டு காதுகளையும் பொத்திய படி, கண்ணை மூடிக் கொண்டே அமைதியாக சதத்தை கொண்டாடி இருந்தார். இது பற்றி பேசிய சுனில் கவாஸ்கர், "ராகுல் சதமடித்த பின், வெளிப்புற சத்தங்களை புறக்கணிக்கும் வகையில் அதனை சைகை காட்டி கொண்டாடுகிறார். பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிக்கும் போது, இப்படி அதனை கொண்டாடலாம்.

ஏன் அப்டி பண்றாரு??..

ஆனால், நீங்கள் நூறு  அடிக்கும் போது, அங்கிருக்கும் பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் தான் செய்வார்கள். அப்படியே அவர்கள் செய்யும் போது, நீங்கள் அதனைக் காது கொடுத்து கேட்டு மகிழ வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில், ராகுல் ஏன் அந்த சமயத்தில் காது பொத்திக் கொண்டு இருக்கிறார் என்பது எனக்கு புரியவே இல்லை. நீங்கள் 0, 1, 2 அல்லது அது போன்ற ரன்களில் அவுட்டாகி சென்றால் அப்படி காதைப் பொத்திக் கொள்ளலாம்" என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

KLRAHUL, SUNIL GAVASKAR, IPL 2022, LSG, சுனில் கவாஸ்கர், கே எல் ராகுல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்