இந்தியா டீம்'ல இருக்குற பெரிய பிரச்சனை.. சுட்டிக் காட்டும் சுனில் கவாஸ்கர்.. இதுக்கு ஒரு முடிவு கண்டிப்பா வேணும் தம்பி
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியில் மிகப் பெரிய பிரச்சனை ஒன்றை, சுனில் கவாஸ்கர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது.
ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியிலும், இந்திய அணி தோல்வியையே தழுவியது.
மோசமான பந்து வீச்சு
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் ஒரு நாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடி வரும் தென்னாப்பிரிக்க அணி, 200 ரன்களைக் கடந்த நிலையில், ஒரு விக்கெட்டை மட்டும் தான் இழந்துள்ளது. முன்னதாக, முதல் போட்டியில், ஆரம்பத்தில் விக்கெட்டுகளை சாய்த்த இந்திய அணி, அதன் பிறகு மிகவும் மோசமாக பந்து வீசியது.
வெங்கடேஷ் ஐயர்
இதனால், எதிரணியினர் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியும், தாங்கள் செய்த தவறால் வெற்றி வாய்ப்பினை இழந்தது. அது மட்டுமில்லாமல், கடந்த போட்டியில் ஆல் ரவுண்டராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயருக்கு ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், பேட்டிங்கிலும் அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
சுனில் கவாஸ்கர் விளக்கம்
தற்போதைய உலக கிரிக்கெட் அணிகளில், சிறந்த அணி என்ற பெயர் இந்தியாவிற்கு இருந்தாலும், கடந்த 8 ஆண்டுகளாக ஒரு முறை கூட ஐசிசி கோப்பை எதையும் வென்றதில்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், ஐசிசி தொடரில் தொடர்ந்து இந்திய அணி தோல்வி அடைந்து வருவதற்கான காரணத்தை சுட்டிக் காட்டியுள்ளார்.
சிறந்த ஆல் ரவுண்டர்கள்
'ஐசிசி தொடர்களில், தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி ஏமாற்றம் அடைந்து வருவதற்கு ஒரே ஒரு காரணம் தான் உள்ளது. 1983 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில், ஐம்பது ஓவர் உலக கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணியை நீங்கள் எடுத்து பார்த்தால், அதில் இடம்பெற்றிருந்த பெரும்பாலானோர், சிறந்த ஆல் ரவுண்டர்கள் தான்.
ஒருத்தர் கூட இல்லை
பேட்டிங் செய்யக் கூடிய நிறைய பேர், சிறப்பாக பந்து வீசவும் செய்வார்கள். 6, 7 மற்றும் 8 ஆம் இடங்களில் ஆல் ரவுண்டர் வீரர்களும் இடம் பிடித்திருந்தார்கள். இந்திய அணியில் முன்பு ஆடிய சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் பேட்டிங்குடன் சேர்த்து, அற்புதமாக பந்து வீசவும் செய்தார்கள். ஆனால், சமீப காலமாக இந்திய அணியில் அப்படி, ஒரு வீரர் கூட இல்லை.
நிதர்சனமான உண்மை
இந்த குறையின் காரணமாக, அணியின் கேப்டனுக்கு வெற்றி பெற நிறைய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதே போல, அணியிலும் மாற்றங்கள் ஏற்படுத்த வழி இல்லாமல் போகிறது' என சுனில் கவாஸ்கர், இந்திய அணியிடம் உள்ள ஆல் ரவுண்டர் குறையைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
சுனில் கவாஸ்கர் தெரிவித்ததைப் போலவே, ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ராகுல் உள்ளிட்ட வீரர்கள் யாரும் பந்து வீசுவது கிடையாது. ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா போன்ற ஆல் ரவுண்டர்கள் மட்டுமே அணியில் உள்ளார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Kohli - BCCI விவகாரம்.. இப்டி ஒரு பிளான் வேற கங்குலி போட்டாரா??.. மீண்டும் வெடித்த 'சர்ச்சை'
- மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி.. வெளியான போட்டி அட்டவணை! எந்த தேதி - கிரவுண்ட் தெரியுமா?
- லிஸ்ட்ல இடம்பிடித்த 3 இந்திய வீரர்கள்.. ஆனா ‘கோலி’ பெயர் மிஸ்ஸிங்.. ரசிகர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த ஐசிசி..!
- இத எல்லாம் பக்காவா செஞ்சாலே போதும்.. இந்தியா மேட்ச் ஜெயிச்ச மாதிரி தான்.. முழு விவரம் உள்ளே
- "அட போங்கைய்யா, நீங்களும் உங்க பிளானும்.." கடுகடுத்த சுனில் கவாஸ்கர்! எதுக்கு இப்படி கோவப்படுறாரு?
- ‘கேப்டன்ஷி சர்ச்சை’.. இப்படி செஞ்சுதான் கோலியை இந்த முடிவை எடுக்க வச்சிருப்பாங்க.. பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பாகிஸ்தான் வீரர்..!
- பிசிசிஐ கொடுத்த ஆஃபர்.. நோ சொல்லி ஒதுங்கிய கோலி??.. என்னங்க சொல்றீங்க?.. மீண்டும் சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்
- அப்போ கோலி முன்னாடியே இதை சொல்லலையா..? Instagram-ல் ரோஹித் பதிவிட்ட அந்த வார்த்தை.. கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!
- இதுக்கும் மேல கோலிக்கு பிரஷர் குடுத்துறாதீங்க.. டக்குனு ‘அந்த’ முடிவை எடுத்திருவாரு.. கொதிக்கும் ரசிகர்கள்..!
- நான் விலகுறேன்.. விராத்தின் அறிவிப்பால் கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி..ஏன் இப்படி பண்ணிங்க கோலி? சோகத்தில் ரசிகர்கள்...